திமுக அணியில் தொடங்கியது தொகுதிப் பங்கீடு பேச்சு
22 Feb 2026, 3:26 pm
<p><strong>திமுக அணியில் தொடங்கியது தொகுதிப் பங்கீடு பேச்சு</strong></p>
<p>சென்னை, பிப்.22- 2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை பிப்ரவரி 22 முதல் தொடங்கியுள்ளது. இதற்காக திமுக பொருளாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர். பாலு தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அமைச்சர் கே.என். நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தொகுதி பங்கிட்டு பேச்சு வார்த்தையை துவங்குவதற்கு முன்பாக குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவரும் முத லமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். முதல் கட்டமாக ஞாயிறன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் (ஐ.யு.எம்.எல்.) பேச்சுவார்த்தை நடை பெற்றது. தொடர்ந்து பிப்ரவரி 23 அன்று மதிமுக, மமக மற்றும் மநீம ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற வுள்ளது. பிப்ரவரி 26 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுட னும், பிப்ரவரி 27 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யுடனும் பேச்சுவார்த்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு விரைவில் அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை முடிந்த வுடன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளான மார்ச் 1 அன்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
