முந்தய பக்கம்

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு

23 Mar 2026, 3:39 pm
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு
<p><strong>அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு</strong></p> <p>&nbsp;பாஜக-27, பாமக-18 தொகுதிகள் ஒதுக்கீடு சென்னை, மார்ச் 23- ஏப்ரல் 23 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி &nbsp;பங்கீட்டின் போது, &ldquo;அதிமுக தலைமையில் கூட்டணி&rdquo; என்று &nbsp;ஒருபுறம் அதிமுகவும், மறுபுறம் பாஜக தலைவர்கள் வாயை &nbsp;திறந்தால் &ldquo;என்டிஏ கூட்டணி&rdquo; என்றும் சொல்கிறார்கள். யார் தலைமை என்பது தொகுதி பங்கீட்டிலேயே விளங்கி விட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி &nbsp;தினகரன் ஆகியோர் தொகுதிக்காக தில்லிக்கு படையெடுத்த னர். அங்கு கிடுக்குப்பிடி பேச்சுவார்த்தை நடந்து உடன்பாடு &nbsp;கையெழுத்தானது. அதை அறிவிக்கவே பியூஷ் கோயல் &lsquo;தாமாக&rsquo; சென்னை வந்தார். &nbsp;யாருக்கு எத்தனை சீட்டு? பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 &nbsp;தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிடும். &nbsp;மீதமுள்ள சிறிய கட்சிகளுக்கு என்ன கிடைக்கும் என்ற அறி விப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாசன் வரவில்லை தமாக தலைவர் ஜி.கே.வாசன் மட்டும் பங்கீட்டு கூட்டத் திற்கே வரவில்லை. 6 தொகுதிகள் கேட்டவருக்கு 4 தொகுதி &nbsp;கொடுக்க கூட்டணி முன்வந்ததாம். வாசனுக்கு அது போத வில்லை. கடந்த முறை மாநிலங்களவை பதவி கொடுத்த னர், இம்முறை அதுவும் இல்லை இப்படியிருக்க இவர் &nbsp;எதற்காக வர வேண்டும்? என்று இருப்பதாக கூறப்படு கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram