தமிழகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவு
8 Apr 2026, 5:30 am

தமிழகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவு

சென்னை, ஏப்.7 - தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 20-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 அன்று நிறைவடைந்தது. காலக்கெடு முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 7,454 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

இதில் ஆண்கள் 6,095, பெண்கள் 1,356 மற்றும் திருநங்கைகள் 3 பேர் என வேட்புமனு தாக்கல் செய்தனர். கரூர் தொகுதியில் 2021 தேர்தலைப் போலவே இம்முறையும் அதிகபட்சமாக 100 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 16 தொகுதிகளில் 623 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஏப்.7 (செவ்வாய்) அன்று காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.