தமிழ்நாடில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை!
7 Apr 2026, 6:15 am
<p><strong>தமிழகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவு</strong></p>
<p>சென்னை, ஏப்.7 - தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 30 அன்று தொடங்கி ஏப்ரல் 6 அன்று நிறைவடைந்தது. காலக்கெடு முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 7,454 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் ஆண்கள் 6,095, பெண்கள் 1,356 மற்றும் திருநங்கைகள் 2 பேர் என வேட்புமனு தாக்கல் செய்தனர். கரூர் தொகுதியில் 2021 தேர்தலைப் போலவே இம்முறையும் அதிகபட்சமாக 108 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். வில்லிவாக்கம் மற்றும் ராதாபுரம் தொகுதிகளில் திருநங்கைகள் இருவர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். சென்னை யில் மட்டும் 16 தொகுதிகளில் 628 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. பரிசீலனை ஏப்.7 (செவ்வாய்) அன்று காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச் சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் செல்வப்பெருந்தகை, பிரேமலதா விஜயகாந்த், சீமான், விஜய் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர் களின் மனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட் டன. சில இடங்களில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உட்பட சிலரது மனுக்கள் சிறு சிறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தவெக மனுக்கள் தள்ளுபடி சிதம்பரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என். பாரியின் வேட்புமனுவில் மனைவியின் சொத்துப் பங்கு தொடர்பான பத்தி பூர்த்தி செய்யப்படாமல் விடப்பட்டிருந்தது. இதனை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுட்டிக்காட்டியதை அடுத்து மனு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தள்ளுபடி செய்யப் பட்டது. இதனால் விஜய் அறிவித்த அதிகாரப் பூர்வ வேட்பாளர் பாரியின் தந்தை நெடுஞ்செழி யன் மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்திருந் தார். அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அருண்குமார் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அவர் வேட்புமனுவை முறையாக பூர்த்தி செய்யாததால் வேட்பாளர் அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளர் நித்யாவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. விஜய்க்கு எதிராக ‘விஜய்’கள் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் சென்னை பெரம்பூர் தொகுதியில் அவரது பெயரி லேயே நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங் கியுள்ளனர். ஜோசப் விஜய் என்று தவெக தலைவர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் எம்.ஜோசப், எஸ்.ஜோசப், கே.விஜய், ஜி.விஜய் என நால்வர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இத்தொகுதியில் பாமக, விஜய் பெயரில் சொத்து வரி செலுத்தப்படவில்லை என புகார் அளித்ததால் மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. செங்கோட்டையன் கோபி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் கட்டிய புதிய வீட்டிற்கு வருமான வரி செலுத்தப்படவில்லை என்றும், காலாவதியான நோட்டரி வழக்கறிஞர் அளித்த சான்றிதழ்களை ஏற்கக் கூடாது என்றும் அதிமுகவினர் புகார் அளித்ததால் மனு பரிசீ லனை நிறுத்தி வைக்கப்பட்டு மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜோலார்பேட்டையில் தாக்குதல் முன்னாள் அமைச்சரும் ஜோலார்பேட்டை அதிமுக வேட்பாளருமான கே.சி. வீரமணி அளவுக்கு அதிகமாக சொத்து வைத்திருப்பதாக தேர்தல் அதி காரியிடம் புகார் அளிக்க வந்த நால்வரை முன்னாள் அமைச்சர் மற்றும் ஆதரவாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராக்கெட் ராஜா-ஹரி நாடார் திருச்செங்கோடு தொகுதியில் 25 வயது பூர்த்தியாகாத ஹரிஷ் என்பவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் ராக்கெட் ராஜாவை முன்மொழிந்தவர் தவறான வாக்காளர் விவரங் கள் அளித்ததாலும், சிறையிலுள்ள ஹரி நாடார் முகவர் மூலம் மனுத் தாக்கல் செய்தது செல்லாது என் பதால் இருவரது மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரவீனின் மனு நிறுத்தி வைக்கப்பட்டு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. ராசிபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் பிரேம்குமாரின் மனு நிறுத்தி வைக்கப்பட்டது. தொண்டாமுத்தூர் தொகுதியில் மனு நிராகரிக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். நாம் தமிழர் மனுக்கள் ஏற்பு நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தாக்கல் செய்யப் பட்ட மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன. இதனால் அந்த கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் ஏப்ரல் 9 ஆகும். அன்று மாலைக்குள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இறுதியாக எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும். இரவு எட்டு மணி நிலவரப்படி, 7,600 வேட்பு மனுக்களில் 3652 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 1,704 மனுக்கள் நிராகரிப்பு, 5 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.</p>
