தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

9 Feb 2026, 3:02 pm
விளையாட்டு

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் இத்தாலியை வீழ்த்திய ஸ்காட்லாந்து

10ஆவது சீசன் ஆடவர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா - இலங்கை  நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 7ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி -  ஸ்காட்லாந்து அணிகள் மோதின. மேற்கு வங்க தலை நகர் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் கள மிறங்கிய ஸ்காட்லாந்து  அணி, தொடக்க வீரர் மூன்சேவின் (84 ரன்கள்) அபார ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. 120 பந்துக்கு 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இத்தாலி அணி தொடக்கத்தில் சறுக்கினாலும், பின்பு நிதானமாக விளையாடியது. எனி னும் கிரிக்கெட்டில் இத்தாலியை விட ஸ்காட்லாந்து அனுபவம் வாய்ந்த அணி என்ற நிலையில், சீரான இடை வெளியில் இத்தாலியின் விக்கெட்டு களை வீழ்த்தி, ஸ்காட்லாந்து அணி 73 ரன்கள் (134-10 : 16.4 ஓவர்கள்) வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஸ்காட்லாந்து அணியின் லீஸ்க் ஆட்டநாயகனாக விருதை வென்றார்.  இத்தாலிக்கு குவியும் பாராட்டு டி-20 உலகக்கோப்பையில் முதன்முறையாக களமிறங்கிய இத்தாலி அணி தனது கன்னி ஆட்டத்தில் தோல்வியை கண்டா லும், பேட்டிங் - பந்துவீச்சில் வலு வான ஆட்டத்தையே வெளிப் படுத்தியது. இத்தாலி கிரிக்கெட் பின்புலம் கொண்ட நாடு கிடையாது. கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் மட்டுமே அந்நாடு புகழ்பெற்றதாக உள்ளது. நிலைமை இவ்வாறு உள்ள சூழ்நிலையில், தனது முதல் உலகக்கோப்பை ஆட்டத்தில் பதற்றமின்றி நன்றாக விளையாடிய இத்தாலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஞாயிறன்று நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் 4ஆவது லீக் : வெற்றி - நியூஸிலாந்து (தோல்வி - ஆப்கானிஸ்தான்) 5ஆவது லீக் : வெற்றி - இங்கிலாந்து (தோல்வி - நேபாளம்) 6ஆவது லீக் : வெற்றி - இலங்கை (தோல்வி - அயர்லாந்து)

இன்றைய ஆட்டங்கள்

நெதர்லாந்து  - நமீபியா (குரூப் ஏ) நேரம் : காலை 11:00 மணி இடம் : தில்லி மைதானம் நியூஸிலாந்து - ஐக்கிய அரபு அமீரகம் (குரூப் டி) நேரம் :  மதியம் 3:00 மணி இடம் : சென்னை, தமிழ்நாடு பாகிஸ்தான் - அமெரிக்கா (குரூப் ஏ) நேரம் : இரவு 7:00 மணி இடம் : கொழும்பு, இலங்கை

குளிர்கால ஒலிம்பிக் 2026 மின்னல் வேகத்தில் முன்னேறிய நார்வே

25ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலி நாட்டின் மிலன், கார்டினா நகரில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் 4ஆவது நாளான திங்களன்று மின்னல் வேகத்தில் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து, பதக்கப்பட்டியலில் தனி நாடாக முத லிடத்திற்கு முன்னேறியது நார்வே.  ஞாயிறன்று ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங் களுடன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் முதலிடத்தை பகிர்ந்து இருந்தது நார்வே. ஆனால் திங்க ளன்று மாலை நிலவரப்படி 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. அமெரிக்கா 2 தங்கப்பதக்கத்துடன் 2ஆவது இடத்தி லும், 1 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் போட்டியை நடத்தும் இத்தாலி 3ஆவது இடத்தி லும் உள்ளன. ஜப்பான் (1 தங்கம், 2  வெள்ளி, 1 வெண்கலம் - 4  பதக்கங் கள்), ஆஸ்திரியா (1 தங்கம், 3 வெள்ளி -  4 பதக்கங்கள்) 4 மற்றும் 5ஆவது இடத்தில் உள்ளன. (குறிப்பு : மொத்த பதக்க எண்ணிக்கை அதிக மாக இருந்தாலும், தங்கத்தின் எண்ணிக் கையை வைத்தே பதக்கப்பட்டியல் நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.