முந்தய பக்கம்

“மேம்பாட்டிலும் ஸ்கோர்... வேலைவாய்ப்பிலும் ஸ்கோர்”

3 Apr 2026, 5:05 pm
“மேம்பாட்டிலும் ஸ்கோர்... வேலைவாய்ப்பிலும் ஸ்கோர்”
<p><strong>&ldquo;மேம்பாட்டிலும் ஸ்கோர்... வேலைவாய்ப்பிலும் ஸ்கோர்&rdquo;</strong></p> <p>அசத்தும் கேரள தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ்! கேரளத்தில் தேர்தல் களம் உச்சக்கட்டதை எட்டியுள்ளது. குறிப்பாக, தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் போட்டியிடும் தொகுதியில் மக்களின் ஆதரவு &lsquo;நாட் அவுட்&rsquo; பேட்ஸ்மேன் போலத் தொடர்கிறது. அமைச்சர் ராஜீவ் தனது தொகுதியில் வெறும் சாலை, பாலம் போன்ற கட்டுமானங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிலும் கவனம் செலுத்தியுள்ளார். ₹450 கோடி மதிப்பிலான புற்றுநோய் மையம், 115 படுக்கைகள் கொண்ட நவீனத் தாய்-சேய் வார்டு எனச் சுகாதாரத் துறையில் அவர் செய்த மாற்றங்கள் தொகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது. தொழில்துறை அமைச்சராக அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்களால், &lsquo;தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள்&rsquo; பட்டியலில் கேரளம் முதலிடம் பிடித்தது. காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் கோட்டையாகக் கருதப்பட்ட இடங்களிலும் கூட &nbsp;இப்போது &lsquo;மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு&rsquo; என்ற முழக்கமே எதிரொலிக்கிறது. &ldquo;ராஜீவ் மீண்டும் சிறப்பாக விளையாடுவார்&rdquo; என்பதே தொகுதி மக்களின் மைண்ட் வாய்ஸாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram