தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்திய வரலாற்றை மறுசீரமைக்கும் தமிழகத்தின் அறிவியல் சான்றுகள்

24 Jan 2026, 3:38 pm
இந்திய வரலாற்றை மறுசீரமைக்கும் தமிழகத்தின் அறிவியல் சான்றுகள்
<p><strong>இந்திய வரலாற்றை மறுசீரமைக்கும் தமிழகத்தின் அறிவியல் சான்றுகள்</strong></p> <p>தமிழக அரசின் தொல்லியல் துறை அண்மைக்காலமாக மேற் கொண்டு வரும் அகழாய்வுக ளும், அதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ள அறிவியல்ப்பூர்வமான உண்மைகளும் இந்திய வரலாற்றையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய பெரும் தேவையை உருவாக்கியுள்ளன. இந்த வரலாற்றுப் பின்னணியில், மதுரையில் நடைபெற்று வரும் மூன்று நாள் பன் னாட்டு கருத்தரங்கம் என்பது மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடை பெற்ற தொல்லியல் ஆய்வுகளும், அதில் கிடைத்திருக்கிற அறிவியல்ப்பூர்வமான உண்மைகளும் இந்திய வரலாற்றை யே மறுபரிசீலனை செய்கிற புதிய சான்று களை முன்வைத்திருக்கிறது. சுமார் 124 அறிவியல் காலக்கணிப்புகளைக் கொண்டு பட்டியலிடப்பட்டு, அதன் அடிப்ப டையில் உலக அறிவுச் சமூகத்தின் முன்னால் உண்மைகளை வைக்கும் ஒரு திருநாளாகவே இக்கருத்தரங்கம் மதுரையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 124 அறிவியல் காலக்கணிப்புகள்: புதிய வரலாறு காலக்கணிப்பு, மரபணு ஆய்வு, தொல் தாவரவியல், தொல் விலங்கியல், தொல் புவியியல் மற்றும் பண்டைய மக்களின் உணவுப் பழக்கம் எனப் பல்வேறு அறிவியல் தளங்களில் இந்த புதிய ஆய்வு கண்டுபிடிப்புகள் விரிவாக நடத்தப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு களின் அடிப்படையில் 124 காலக் கணிப்புகள் என்பது மெய்ப்பிக்கப்பட்டி ருக்கிறது. அந்த சான்றுகளை எல்லாம் பட்டியலிட்டு தொகுத்து நூல்களாக வெளியிட்டு அதன் அடிப்படையில் சர்வ தேச கருத்தரங்கம் பன்னாட்டு ஆய்வா ளர்கள் பங்கெடுக்கிற நிகழ்வாக இது மதுரையில் நடைபெற்று வருகிறது. தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை அத்திரம்பாக்கம்(திருவள்ளூர்) பகுதி யில் சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இது உலக அளவில் மனித சமூகப் பரவலாக்கம் குறித்த தற்போ தைய கோட்பாடுகளின் மீது மிக முக்கி யமான கேள்விகளை எழுப்பியுள்ளது. முக்கியக் கண்டுபிடிப்புகளும் மாற்றப்படும் கோட்பாடுகளும் அதேபோல, சிவகளை (தூத்துக் குடி) உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள் ளப்பட்ட ஆய்வுகள் இந்தியத் துணைக் கண்டத்தின் தொழில்நுட்ப வரலாற்றை யே மாற்றி எழுதியுள்ளன. இரும்பு பயன் பாடு என்பது வடக்கிலிருந்து தெற்கே பரவியது என்ற பொதுவான வரலாற்றுப் பார்வையை மறுஆய்வுக்கு உட்படுத்தி, சுமார் 5,600 ஆண்டுகளுக்கு முன்பே சிவகளையில் இரும்பு பயன்பாட்டில் இருந்தது அறிவியல்ப்பூர்வமாக நிரூ பிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்ச் சமூகம் அடைந்திருந்த தொழில்நுட்ப முதிர்ச்சி யைக் காட்டுகிறது. அதுமட்டுமன்றி, கீழடி (மதுரை அருகே) உள்ளிட்ட பகுதிக ளில் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள சுமார் 15,000 குறியீடுகள், சிந்துவெளி நாகரிகக் குறியீடுகளுடன் 90 விழுக்காடு ஒத்துப்போகின்றன. சிவகளையில் கிடைத்த தமிழ் எழுத்துக்கள் ஏறக் குறைய 2,800 முதல் 3,000 ஆண்டு கள் பழமையானவை என்பது மண்ண டுக்குகளின் ஆய்வின் மூலம் மெய்ப்பிக் கப்பட்டுள்ளது. இது எழுத்தும், எழுத்து சார்ந்த நகர நாகரிகமும் எங்கே தோன்றியது என்பதற்கான புதிய ஆவ ணங்களை உருவாக்கி இருக்கிறது. தமிழகம் வேளாண் சமூகத்திற்குள் மிக முன்கூட்டியே நுழைந்ததற்கான சான்று களை ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி) மற்றும் சிவகளை ஆய்வுகள் வழங்கு கின்றன. அங்கு கிடைத்துள்ள நெல் மணிகள், நன்செய் மற்றும் புன்செய் விவசாய முறைகளில் தமிழகம் கொண்டி ருந்த தொன்மையான அறிவை உறு திப்படுத்துகின்றன. ஒன்றிய அரசின் பாராமுகமும் இருட்டடிப்பும் இத்தகைய அறிவியல் உண்மை கள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில், ஒன்றிய அரசு கீழடி அக ழாய்வு முடிவுகளை இன்றுவரை வெளி யிட மறுப்பது கடும் கண்டனத்திற் குரியது. அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்த அகழாய்வு அறிக்கையை இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தெரியாமல் இருட்டடிப்பு செய்யும் வேலை யை ஒன்றிய அரசு செய்கிறது. நாடாளு மன்றத்தில் இது குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆளுக்கு ஒரு பதிலை ஒன்றிய அரசு அளிக்கிறது. அறிக்கை யைத் திருத்தி எழுதச் சொல்லியிருக் கிறோம் என்றும், மறுஆய்வு செய்கிறோம் என்றும் மழுப்பலான பதில்களே கிடைக்கின்றன. அறிவியல்ப்பூர்வமான கீழடி முடிவுகளை மறைக்கும் இந்தியத் தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ), புராண நம்பிக்கைகளின் அடிப்படையில் துவார கையிலும், ஹரியானாவில் சரஸ்வதி நதியைத் தேடியும் அகழாய்வுகளை நடத்துகிறது. சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலம் ஜகத்கிராமில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அசுவமேத யாகம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் அகழாய்வு செய்யப்போவதாக ஏஎஸ்ஐ அறிவித்துள்ளது. அறிவி யல் பார்வையற்ற இத்தகைய அணுகு முறைகள் வேதனையளிப்பவை. நாம் இன்று அறிவியல் சான்றுகளைக் கொண்டு, எந்தவித அறிவியல் சிந்த னையும் இல்லாத பழமைவாதி களோடு விவாதிக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். ஏன் இந்தத் தயக்கம்? இந்தியாவின் ஆதி அறிவு என்பது வேதங்களில் மட்டுமே இருக்கிறது என்ற பிம்பத்தைக் கட்டியெழுப்ப முனை யும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின ருக்கு, வேத காலத்திற்கு முன்பே செழித் தோங்கிய நகர நாகரிகம் தமிழகத்தில் இருந்தது என்பதை ஏற்க மனமில்லை. &nbsp;5,700 ஆண்டுகளுக்கு முன்பே சிவ களையில் இரும்பு பயன்பாடு இருந்தி ருக்கிறது, 4,800 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக்கள் இருந்திருக்கின் றன. பிரதமர் மோடி அவர்கள் தமிழகம் வரும்போது தமிழ் மொழியைப் பற்றிப் பேசினாலும், கீழடி அகழாய்வு முடிவு களை வெளியிடத் தயங்குகிறார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஒரு அகழாய்வைக் கூடச் செய்யாத இந்தியத் தொல்லியல் துறை, செய்யப்பட்ட ஆய்வு களின் முடிவுகளையும் முடக்கி வைத்தி ருக்கிறது. ஆனால், தமிழக அரசு தனது சொந்த முயற்சியில் 124 புதிய கண்டுபிடிப்புகளை உலக அரங்கில் வைத்துள்ளது. யாராலும் மறைக்க முடியாது அதிகாரத்தின் மூலம் அறிவை ஒரு போதும் பணிய வைக்க முடியாது. அரசி யல் சட்டத்தையே மாற்றினாலும் சூரியன் மேற்கில் உதிப்பதாகச் சொன்னால் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோலவே, அறிவியல்ப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தமிழரின் தொன்மை வரலாற்றையும் யாராலும் மறைக்க முடி யாது. தமிழ்நாட்டிற்குள் நுழைந்தாலே தங்களது வரலாற்றுக்கு எதிரான உண்மைகள் வெளிவரும் என்பதால் அதைத் திட்டமிட்டு மறைக்கப் பார்க்கி றார்கள். ஆனால் இந்த 124 காலக் கணிப்புகள் உலகிற்கு உண்மையைச் சொல்லும். மதுரை அகழாய்வு பன்னாட்டுக் கருத்தரங்கில் சு.வெங்கடேசன் அளித்த பேட்டியின் சுருக்கம்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.