தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவியல் பூர்வமான கல்வியின் மூலமே போதை அரக்கனை ஒழிக்க முடியும் – மு.வீரபாண்டியன்

18 Aug 2026, 12:07 am
அறிவியல் பூர்வமான கல்வியின் மூலமே போதை அரக்கனை ஒழிக்க முடியும் – மு.வீரபாண்டியன்

அறிவியல் பூர்வமான கல்வியின் மூலமே போதை அரக்கனை ஒழிக்க முடியும் – மு.வீரபாண்டியன்

கோவை, ஆக. 17-காவல்துறையின் நடவடிக்கையால் மட்டுமே போதை அரக்கனை ஒழிக்க முடியாது, அறிவியல் பூர்வமான கல்வியின் மூலமே இது சாத்தியம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை மண்டலத்தின் குடிநீர் ஆதாரம், தொழிற்துறை வளர்ச்சி, விவசாய மேம்பாடு மற்றும் நில உரிமை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்களன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இக்கட்சியின் மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறுவாணி, பில்லூர் அணைகளை தூர்வாரி குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

பாண்டியாறு-புன்னம்புழா, ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம், தனி ரயில்வே கோட்டம், சென்னை உயர் நீதிமன்றக் கிளைஅமைக்க வேண்டும். நீலம்பூர் - மதுக்கரை சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

கோவையில் சமீபநாட்களில் கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஏற்க முடியாத ஒன்று. இது போன்ற சம்பவங்கள் தமிழ் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களுக்கு எதிரானவை. வெறும் காவல்துறைநடவடிக்கை மட்டுமன்றி, சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூர்வமான கல்வியின் மூலமே போதை அரக்கனை ஒழிக்க முடியும். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவேரி, மேகதாது மற்றும் எல்லைப்பிரச்சினைகளில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் தலைமையேற்றார். இதில், மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.