அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி சாதாரண மக்களுக்கு பயனளிக்க வேண்டும்!
31 Jan 2026, 3:56 pm
<p><strong>அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி சாதாரண மக்களுக்கு பயனளிக்க வேண்டும்!</strong></p>
<p>சிவகாசி, ஜன.31 - அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தெரி வித்தார். “அறிவியல் மக்களுக்கே, அறிவியல் நாட்டிற்கே, அறிவியல் சுயசார்பிற்கே” என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் 23 ஆவது மாநில மாநாடு சிவகாசியில் வெள்ளியன்று எழுச்சியுடன் துவங்கி யது. பிப்.1 (ஞாயிறு) அன்று மாநாடு நிறைவு பெறு கிறது. ஸ்ரீகாளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “அறிவியலை அறிவோம், அறிவிய லால் இணைவோம்” என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற மாநாட்டிற்கு வரவேற்புக் குழு தலை வர் பி.ரவீந்திரன் தலைமை வகித்தார். வரவேற்புக் குழு செயலாளர் எம்.சுந்தரராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் பி.கே. பால முருகன், மாநிலச் செயலாளர் எஸ்.பரமசிவம், மாநில துணைத் தலைவர் கே.பாண்டியம்மாள், மாவட்டத் தலைவர் ஆர்.சுதாபெரியதாய், மூத்த தலைவர் அருணகிரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை மாநில துணைத் தலைவர் ஆர். இராமானுஜம் துவக்கி வைத்து உரையாற்றி னார். மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா சிறப்புரையாற்றி னார். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், வங்கி ஊழி யர் சங்கத்தைச் சேர்ந்த தாமஸ் பிராங்கோ, முன் னாள் பொதுச் செயலாளர் ராஜமாணிக்கம், முனைவர்கள் கிருஷ்ணசாமி, தினகரன், பேராசிரி யர்கள் தினகரன், சுரேஷ் தளியத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயற்குழு உறுப்பினர் பொற்செல்வி நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கிற்கு முன்னாள் மாநிலத் தலைவர் என்.மணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.குருவையா வரவேற்றார். மாநில துணைத் தலைவர்கள் மாணிக்கத்தாய், எஸ்.அனுரத்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் என்.மாதவன் அறிமுக உரையாற்றினார். இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் த.வி. வெங்க டேஸ்வரன் கருத்துரையாற்றினார். முனைவர் கிருபாநந்தினி எழுதிய “பறவைகள் புரளிகளும் அறிவியல் பார்வையும்” என்ற நூலை கல்லூரி முதல்வர் பாலமுருகன் வெளியிட, முதல் பிரதியை மாநில துணைத் தலைவர் மன்னை சேதுராமன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியை முன்னாள் பொதுச் செயலாளர் ஏ. அமலராஜன் ஒருங்கிணைத்தார். மாவட்ட பொருளாளர் ஆர்.லிங்கேஸ்வரி நன்றி தெரிவித்தார். பின்னர் பிரதி நிதிகள் மாநாடு துவங்கியது. கருத்தரங்கில் முனைவர் த.வி. வெங்க டேஸ்வரன் பேசுகையில், “அறிவியல் தொழில் நுட்ப மாற்றங்கள் பொருள் உற்பத்தி முறை யையே மாற்றும் வகையில் உள்ளன. 21 ஆம் நூற்றாண்டில் புதிய உற்பத்தி முறை உருவாகி வருகிறது. மறுசுழற்சி செய்யக்கூடிய வளங்களை முழுமையாக பயன்படுத்தாததால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிக்கிறது. ஆக்சிமீட்டர் போன்ற கருவிகள் முதலில் குறிப்பிட்ட மக்களை மட்டுமே வைத்து பரிசோதிக்கப் பட்டதால் கணக்கீட்டில் பிழைகள் ஏற்பட்டதையும், பின்னர் அனைவருக்கும் பொருந்தும் வகையில் திருத்தம் செய்யப்பட்டதையும் எடுத்துக்காட்டாக கூறினார். பெரும்பாலான மருந்துகள் ஆண் களை மையமாக வைத்து ஆய்வு செய்யப்படு வது கவலைக்குரியது; பெண்களையும் உள்ளடக்கும் ஆய்வுகள் அவசியம். காலநிலை மாற்றம், கார்பன் உமிழ்வு, பழைய இயந்திரங்களின் பயன்பாடு ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சந்தை முறை மட்டும் இப்பிரச்சனைகளுக்கு தீர்வா காது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்” என்றார்.</p>
