தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவியல் கதிர் - ரமணன்

13 Dec 2025, 1:22 pm
அறிவியல் கதிர் -  ரமணன்

அறிவியல் கதிர் -  ரமணன்'

காட்டு விலங்குகளும் வீட்டு விலங்குகளும்

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் வளர்ப்புப் பிராணிகளின் உடல் அளவு பெரிதாகிக் கொண்டே போயிருக்கிறது; அதே சமயம் காட்டு விலங்குகளின் உடல் அளவு சிறியதாகிக் கொண்டே வந்திருக்கிறது. பிரான்சில் நடந்த ஒரு ஆய்வில் இந்த இரண்டிற்கும் காரணம் ஒன்றே என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் பரிணாமத்தின் பின்னால் இயக்கும் பெரும் சக்தி மனிதன். மாண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அகழ்வாயாளர் சைப்ரியன் முராவ் தலைமையிலான குழுவினர் நடத்திய பெரும் ஆய்வு இதற்கு சரியான எடுத்துக்காட்டாக உள்ளது. 311 அகழ்விடங்களிலிருந்து எடுக்கப்பட்ட 81,000 எச்சங்களை அளவிட்டதில் கோழி, ஆடு மாடு போன்ற வளர்ப்புப் பிராணிகளின் உடல் அளவு கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அதிகரித்திருப்பதும் நரி, மான் போன்ற காட்டு விலங்குகளின் அளவு சிறியதாகி இருப்பதும் தெரிந்தது. இந்த ஆய்வுக் குழுவினர் 8000 ஆண்டுகளுக்கான பருவநிலை, தாவர வளர்ச்சி மற்றும் மனிதனின் நிலப் பயன்பாடு ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டனர். விலங்குகளின் நேர் எதிரான மாற்றம் வேளாண்மை மற்றும் நகர்மயமாக்கலை ஒட்டிய கடந்த 1000 வருடங்களில் வேகமெடுத்திருப்பதையும் கண்டனர்.  பெருகி வரும் மனித இனம், காடுகளை சுருக்கியதாலும் துண்டாடியதாலும் வளங்கள் குறைந்தன. இதோடு தாவர உண்ணிகளையும் புலால் உண்ணிகளையும் மனிதர்கள் ஒரு சேர வேட்டையாடியதால் அவை இயற்கை தெரிவின் அழுத்தத்திற்கு உள்ளாயின. அதனால் அவற்றின் உடல் அளவு சுருங்கியது; எண்ணிக்கையும் குறைந்தது. இதற்கிடையில் வளர்ப்புப் பிராணிகள் தரும் பொருட்களுக்காக மனிதர்கள் அவற்றை ஆதரித்து வளர்த்தனர். பெரிதான ஆடுகளிடமிருந்து அதிக உரோமங்கள்; பருத்த கால்நடைகள் என்றால் அதிக மாமிசம்; பெரிய கோழிகள் என்றால் அதிக முட்டைகள். ஒரு எடுத்துக்காட்டாக வீட்டில் வளர்க்கும் கோழிகளின் உடல் எடை எல்லா காட்டுப் பறவைகளையம் சேர்த்த உடல் எடையைப் போல மூன்று மடங்கு உள்ளதாம். பல மீன்கள் இப்போது 20 சதவீதம் சிறியதாகவும் 25 சதவீதம் வாழ்நாள் குறைவானதாகவும் உள்ளன.  நமக்கு நேரடியாக பலன் தராத விலங்குகள்தான் சுற்று சூழலை நிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று 2021இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு காட்டுகிறது. நமக்கு பலன் தரும் இனங்கள் பிழைத்திருப்பதற்கு தேவையான நிலைத்தன்மையையும் அவையே தருகின்றன. எனவே காட்டு விலங்குகள் பிழைத்திருக்க நாம் உதவ வேண்டும். இந்த ஆய்வு PNAS.எனும் இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறுகிறது.

கண்ணின் வண்ணங்கள்

ஒருவரை நாம் பார்க்கும்போது முதலில் அவர் கண்களைத்தான் பார்க்கிறோம். நம் நினைவில் அதிகம் நிற்பதும் அதுதான். மனிதர்களின் கண்கள் பழுப்பு நிறமாகவோ நீல நிறமாகவோ இருக்கின்றன. பழுப்பு நிறம்தான் சாதாரணமானது. குறிப்பாக ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும். வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நீல நிறக் கண்கள் அதிகம். உலகில் அரிதாக பச்சை நிறக் கண்களும் உண்டு. ஒளியைப் பொறுத்து பச்சைக்கும் பழுப்புக்கும் மாறுவது போல் தோன்றும் ஹேசல் வகை கண்களும் இருக்கின்றனவாம். ஏன் இப்படி பல வண்ணங்களில் கண்கள் இருக்கின்றன?  நம் கண் பாவையை சுற்றி ஐரிஸ் எனும் வண்ண வளையத் தசை உள்ளது. அதில் இருக்கும் மெலனின் எனும் நிறமிதான் கண்களின் நிறத்தை உண்டாக்குகிறது. அதிக அளவில் மெலனின் இருந்தால் அவை ஒளியை முழுவதும் உள்வாங்கி கருமை அல்லது பழுப்பு நிறத்தை கொடுக்கின்றன. குறைவாக இருந்தால் நீல நிறமாகக்கி காட்சியளிக்கும். உண்மையில் இது மெலனினால் மட்டும் உண்டாவதில்லை. ஒளியை சிதறடிப்பதால் (டிண்டால் விளைவு)இது உண்டாகிறது. வானம் நீல நிறமாக காட்சியளிப்பதை ஒத்தது இது. ஒளியிலுள்ள குறைவான அலை நீளம் கொண்ட நீலம் போன்ற கதிர்கள் அதிக அலை நீளம் கொண்ட சிவப்பு மற்றும் மஞ்சள் கதிர்களை விட அதிகம் சிதறடிக்கப்படுகின்றன. மெலனின் குறைவாக இருக்கும்போது குறைவான ஒளியே உள் வாங்கப்படுகிறது. அதிகம் சிதறும் நீலம் கண்ணின் நிறத்தையே நீலமாகக் காட்டுகிறது.  மெலனின் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் மத்திமமாக இருந்தால் பச்சை நிறம் உண்டாகிறது. ஐரிசில் மெலனின் சீராக பரவவில்லையென்றால் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளியைப் பொறுத்து பலநிறங்கள் உண்டாகும். அதுதான் ஹேசல் கண்கள். கண்களின் நிறத்தை நிர்ணயிப்பதில் பல மரபணுக்கள் காரணமாக இருக்கின்றன. எனவேதான் ஒரே குடும்பத்தில் வெவ்வேறு நிறக் கண்களை உடைய பிள்ளைகள் இருக்கலாம். பாண்ட் பல்கலைக்கழக கிளம் ஜோன்ஸ் மறு ஆக்க மருத்துவ மையத்தை சேர்ந்த டவீனியா பீவர் அவர்களின் கட்டுரையிலிருந்து (சயின்ஸ் அலர்ட்டில் வந்தது).

தசைப் பிடிப்பும் விளையாட்டு தளங்களும்

விளையாட்டு வீரர்களுக்கு திடீரென கிராம்ப் எனப்படும் தசைப் பிடிப்பு ஏற்பட்டு போட்டியிலிருந்து வெளியேறுவதை போன்று துயரம் வேறு எதுவும் இல்லை. வலி மிகுந்த இந்த தசை துடிப்பானது வீரர்களையும் பயிற்சியாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் பல காலமாக விரக்திக்குள்ளாக்கி வருகிறது. இது நீர் வறட்சி அல்லது எலெக்ட்ரோலைட் சீர் குலைவினால் ஏற்படுகிறது என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் நல்ல அளவு நீர் சத்து கொண்டவர்களுக்கும் சில வேளைகளில் இது ஏற்படுகிறது; அதே சமயம் வெப்பமான ஈரப்பதமான சூழலில் விளையாடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கிறது.  விளையாடும் தள பரப்பு இந்த பாதிப்பில் முக்கியப் பங்கு வகிப்பதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன. கென்னிசா மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்பயிற்சி பேராசிரியர் மைக்கேல் ஹேல்ஸ் குழுவினர் நடத்திய ஆய்வில் விளையாடும் பரப்பின் குறிப்பான தன்மைகள் விரைவாக நரம்பு தசை அயர்ச்சிக்கும் எதிர்பாராத தசைப் பிடிப்புக்கும் இட்டுச்செல்கிறது என காட்டியுள்ளது. தசைகள் சுருங்கி விரிவதற்கான நரம்பு மண்டல சமிக்கைகள் சீர்குலையும்போது தசை அயர்ச்சி ஏற்படுகிறது. விளையாட்டுப் பரப்பு கடினமானதாகவோ நெகிழ்வானதாகவோ இருக்கும். இதற்கு ஏற்ப பயிற்சி எடுக்காவிட்டால் இந்த சீர்குலைவு ஏற்படுகிறதாம். இவர்களது ஆய்வில் வெவ்வேறு வகைப்பட்ட தளங்களில் ஓடும்போது 13 சதவீதம் தசை இயக்கம் மாறுபடுவது காணப்பட்டது. அதேபோல் தடகள வீரர்களுக்கு 50சதவீதம் ஹாம்ஸ்டிரிங் எனப்படும் தொடை சதைப் பிடிப்பு ஏற்பட்டது.  பகுதி வாரியாக விளையாட்டு தளங்களின் கெட்டித் தன்மையை ஆவணப்படுத்துவதன் மூலம் பயிற்சியாளர்களும் விளையாட்டு அமைப்புகளும் அதே போன்ற பயிற்சி தளங்களை அமைத்து பயிற்சி அளிக்கலாம் என்று ஆய்வாளர்கள் முன்மொழிகின்றனர்.  நீர்ச் சத்தும் ஊட்டச் சத்தும் விளையாட்டு திறமைக்கு முக்கியமானவை. ஆனால் வீரர்களை தகவமைத்து, காலணிகள் பொருந்துவது மற்றும் விளையாட்டு தளங்களுக்கு ஏற்ப பயிற்சி எடுப்பது ஆகியவை தசைப் பிடிப்புக்கு தீர்வாகும். தசை அயர்ச்சியை கண்டுபிடிக்கும் பயோ சென்சார்கள், தள பரப்பை சோதனை செய்யும் கருவிகள் இவற்றுடன் இயந்திரக் கற்றல் ஆகியவற்றின் மூலம் ஒவ்வொருவருக்கும் வரக் கூடிய தசைப் பிடிப்பை முன்னறியலாம். அதற்கேற்ப பயிற்சி திட்டங்களையம் வகுக்கலாம்; பதிலி வீரர்களை நிறுத்தி வைக்கலாம்; முடிந்தால் விளையாட்டு பரப்புகளை மாற்றலாம். இதன் மூலம் வீரர்களின் உடல் நலத்தை பாதுகாக்கலாம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.