தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிர் விளையாட்டு * மஞ்சு

20 Jun 2026, 9:17 pm
புதிர் விளையாட்டு * மஞ்சு

புதிர் விளையாட்டு * மஞ்சு

அழகு மின்மினிகளே, இன்று கதைப் புதிரிலேயே ஒரு புதிய விளையாட்டு. முயன்று பார்க்கத் தயார்தானே நீங்கள்?.

விண்கல் மீண்டது எப்படி?

இளமதி தனது பள்ளி அறிவியல் கண்காட்சிக்காக இருட்டில் ஒளிரும் விந்தையான பச்சை இரும்புத் துண்டு ஒன்றைத் தயாரித்தாள். அதற்கு அவள் “விண்கல்” என்று பெயர் சூட்டினாள். வீட்டு மேசையில் வைத்துவிட்டுத் தெருவில் தோழர்களுடன் விளையாடச் சென்றாள். விளையாடி முடித்ததும் விண்கல்லைக் காட்டுவதற்காக நண்பர்கள் அப்துல், ஜூலி இருவ ரையும் அழைத்து வந்தாள். மேசையில் விந்தைக் கல்லைக் காணவில்லை. தன் அண்ணன் மதிவாண னின் வேலையாகத்தான் இருக்கும் என்று நினைத்தாள். அவள் நினைத்தது சரிதான் என்று காட்டுவது போல மேசையில் ஒரு காகிதம் வைக்கப் பட்டிருந்தது. அதில் மதிவாணன் ஒரு அறிவியல் விடுகதையை எழுதியிருந்தான். “இதுவும் இன்னும் இரண்டு புதிர்களும் உள்ளன. மூன்றுக்கும் சரியான விடைகளைச் சொன்னால் விண்கல் இருக் கும் இடத்தை அடையலாம்” என்று குறிப்பிட்டிருந்தான். அந்த முதல் புதிர் இதுதான்: “முன்னால் நின்றால் நீயே வந்துவிடுவாய், பின்னால் நின்றால் நான் போய்விடுவேன்! இடது கையை நீ உயர்த்தினாலோ வலது கையை நான் தூக்குவேன்!” சிறிது நேரம் யோசித்த இளமதி விடையாக ஒரு பொருளைக் கண்டுபிடித்தாள். அறையிலேயே இருந்த அந்தப் பொருளின் பின்னால் இரண்டாவது காகிதம் இருந்தது: “சுட்டெரிக்கும் சூரியனால் நான் புகையாவேன், குளுகுளு காற்று வீசினால் மழையாவேன், உறைந்து போனால் கனமான கட்டியாவேன், உங்கள் தாகம் தீர்க்கும் துணையாவேன்!” நண்பன் அப்துல் இந்தப் புதிரில் மறைந்திருக்கும் பொருளை ஊகித்தான். அறையின் மூலையில் இருந்த அந்தப் பொருளை அடைந்தார்கள். அதன் அருகில் கடைசிப் புதிர் இருந்தது: “கண்ணுக்கே தெரியாத கையை நீட்டுவேன் கடினமாக இருப்பவரைக் கட்டிப் பிடிப்பேன் ஊரில் எவரும் திசையறிய ஒத்துழைப்பேன் ஒத்தவர் வந்தாலோ விலகி நிற்பேன்.” மூன்றாவது புதிரை ஜூலி விளக்கினாள். அங்கிருந்த உயரமான இரும்பு அலமாரியின் பக்க வாட்டில் மதிவாணன் ஒட்டியிருந்த பொருளுடன் பச்சைக் கல் சேர்ந்து இருந்தது! சவாலில் வென்ற மகிழ்ச்சியுடன் மூவரும், அம்மா கொடுத்த பலாப்பழச் சுளைகளைச் சுவைத்துக்கொண்டே கண்காட்சிக்கான அறிவியல் குறிப்புகளை எழுத அமர்ந்தார்கள். அவர்கள் கண்டுபிடித்த விடைகள் என்ன?

விடை

உங்கள் அறிவியல் பாடத்தில் படித்த கண்ணாடி, நீர், காந்தம் என்று கண்டுபிடித்த அறிவுச் சுடர்களுக்கு மதிவாணனின் பாராட்டுகள், பாலர் பூங்காவின் வாழ்த்துகள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.