தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

31 Oct 2026, 9:44 pm
அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

அடைக்கலம் தேடி வந்த குளவி சிலந்தி - சிதம்பரம் இரவிச்சந்திரன்

புவி வெப்ப உயர்வு தொடரும் நிலையில், இங்கிலாந்தின் வடக்குப் பகுதிக்கு ‘ஆர்ஜியோப் ப்ரூனெஷி’ (Argiope bruennichi) எனப்படும் குளவி சிலந்தி (Wasp spider) காலநிலை அகதியாக அடைக்கலம் தேடி வந்துள்ளது. செஷர் (Cheshire) பகுதியில் முதல்முறையாகத் தென்பட்டுள்ள இந்த விசித்திரமான சிலந்தி, உள்ளூர் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறதென்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விரும்பத்தகாத வருகையும் இயல்புகளும்

மஞ்சள் மற்றும் கறுப்பு நிறங்களுடன் நச்சுத்தன்மை கொண்டுள்ள இந்தச் சிலந்தி, எதிரிகளை விரட்டக் குளவியைப் போல நடித்துப் புதிரான பாணிகளில் வலையைப் பின்னுகிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இது, காலநிலை சூடாவதால் தனது வாழிடப் பரப்பை வடக்கு நோக்கி விரிவுபடுத்துகிறது. பெண் சிலந்திகள் 2 சென்டிமீட்டர் வரை வளர்ந்து யு.கே.யில் வாழும் பெரிய சிலந்தி இனங்களில் ஒன்றாக மாறுகின்றன. இணை சேரும்போது அல்லது சேர்ந்த பிறகு ஆண் உயிரினங்களை இவை கொன்று உண்பது இதன் தனிப்பட்ட இயல்பாகும்.

காலநிலை அகதிகளும் சூழல் எச்சரிக்கையும்

பிரிட்டிஷ் சிலந்திகள் சங்க நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்ட இந்த வருகையானது, காலநிலை மாற்றத்தால் வனஉயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு வடக்குப் பகுதிக்கு நகர்கின்றன என்பதைக் காட்டுகிறது. மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்படும் இந்த இடப்பெயர்வுகளைச் சூழலியலாளர்கள் ‘காலநிலை அகதிகள்’ என்று அழைக்கின்றனர். ஆசிய குளவி போன்ற ஆக்கிரமிப்பு இனங்களின் எதிர்கால நகரங்களால், மாறும் காலநிலைக்குத் தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியாத உள்ளூர் இனங்கள் முற்றிலும் அழிந்துபோகும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

எழுபத்தி எட்டு ஆண்டுகளில் ஏற்படப்போகும் கூட்டப்பேரழிவு - சிதம்பரம் இரவிச்சந்திரன்

இன்னும் எழுபத்தி எட்டு ஆண்டுகளில் பூமி கடலில் வாழும் உயிரினங்களின் மாபெரும் கூட்டப் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்காவின் நியூஜெர்சி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். புவி வெப்ப உயர்வு மற்றும் ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக, 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெர்மியன் பேரழிவைப் போன்றதொரு சூழல் 2100-ஆம் ஆண்டில் உருவாக வாய்ப்புள்ளது. அன்றைய காலத்தில் 90 சதவீத கடல்வாழ் உயிரினங்கள் அழிந்ததை வரலாற்றில் நாம் அறிவோம்.

கார்பன் உமிழ்வும் பேரழிவு சாத்தியமும்

2100-ஆம் ஆண்டில் வெப்பமண்டலப் பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்களின் பல்லுயிர்த்தன்மை பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், துருவப் பகுதிகளிலும் கடுமையான அழிவுகள் ஏற்படும். எனினும், கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் உடனடியாகத் தயாரானால், இத்தகைய பேரழிவின் தாக்கத்தை 70 சதவீதம் வரை குறைக்க முடியும் என ஆய்வுக் குழுவின் தலைவர் ஜஸ்டின் பென் குறிப்பிடுகிறார். கடலில் கார்பன் கலப்பதால் நீர் அமிலமாகி ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.

ஆறாம் இனப்பேரழிவின் எச்சரிக்கை

பூமி இதுவரை ஐந்து இயற்கையான இனப்பேரழிவுகளைச் சந்தித்துள்ள நிலையில், மனிதச் செயல்பாடுகளால் தற்போது நிகழ்ந்துகொண்டிருப்பது ஆறாம் இனப்பேரழிவாகும். கடந்த 1500-ஆம் ஆண்டுக்குப் பிறகு இலட்சக்கணக்கான உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மனிதனால் அறியப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையே மிகக் குறைவு என்பதால், தெரிந்தே நிகழ்த்தப்படும் இந்தப் பேரழிவை உடனடியாகத் தடுத்து நிறுத்தினால் மட்டுமே வருங்காலத் தலைமுறைக்கு ஒரு துடிப்புள்ள பூமியை விட்டுச்செல்ல முடியும்.

கடல் மாறிவிட்டது

இந்தியாவில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களின் கடற்பகுதிகளில் கடல் தீ பிடித்தது போல அலைகள் பச்சை நிறமாக எழும்பித் தாழும் விசித்திர நிகழ்வு தீவிரமடைந்துள்ளது. கடலின் காலநிலையில் ஏற்பட்டுள்ள தீவிர மாற்றத்தையே இது சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ‘நாக்டிலூக்கா சிண்டிலென்ஸ்’ (Noctiluca scintillans) எனப்படும் மிதவை நுண்ணுயிரிகளின் பெருக்கமே (blooming) இந்த மாற்றத்திற்குக் காரணமென கேரளா நீர் உயிரியல் பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் ஏ. பிஜுகுமார் விளக்குகிறார்.

உயிரி இரசாயன வேதிவினையும் பச்சை ஒளியும்

இம்மிதவை உயிரினங்களின் உடலில் ‘பெடினோ மோனாஸ் நாக்டிலுகி’ என்ற ஒரு செல் பாசி சக உயிரினமாக வாழ்ந்து அவற்றுக்குப் பச்சை நிறத்தைத் தருகிறது. நீர் நிலைகளில் சத்துகள் அதிகமாய்ச் சேர்வதும் (யூட்ரோபிகேஷன்), ஆக்ஸிஜன் அளவு குறைவதும் இந்தியக் கடலோரங்களில் இந்நிகழ்வு அதிகரிக்க முக்கியக் காரணமாகும். இந்த நாக்டிலூக்கா உயிரினங்கள் நேரடியாக நஞ்சில்லாவிட்டாலும், இவை திடீரெனப் பெருகும்போது வெளிவரும் அமோனியாவின் நச்சுத்தன்மை காரணமாக மீன்கள் மற்றும் பிற உயிரினங்கள் கூட்டமாக மரணமடைகின்றன.

உணவுச்சங்கிலி பாதிப்பும் இயற்கை எச்சரிக்கையும்

நாக்டிலூக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பதால் மீன்களின் முக்கிய உணவான டை ஆட்டம் தாவர மிதவைகளின் அளவு குறைந்து உணவுச்சங்கிலியில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மனிதர்களின் அதிகப்படியான கழிவுகள் மற்றும் இரசாயனப் பொருட்கள் கடலில் கொட்டப்படுவதால் கடல்நீரின் தன்மையும் மாசடைகிறது. இயற்கையின் போக்கைத் தன் சுயநலத்தால் மாற்றிய மனிதன், இன்று காற்றையும் நீரையும் ஆபத்தான முறையில் சீரழித்து வருவதற்கு கடலில் தோன்றும் இந்த பச்சைத் தீ ஒரு தெளிவான சான்றாகும்.

செயற்கை நுண்ணறிவால் உருவான ‘RK-14’ மருந்து

மருந்துகளுக்குக் கட்டுப்படாத அபாயகரமான பாக்டீரியாக்கள் மற்றும் சூப்பர்பக் கிருமிகளை அழிக்க ‘RK-14’ என்ற புதிய செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்டைடை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சிறுநீர் வடகுழாய்களில் உருவாகும் பாதுகாப்புமிக்க உயிரிப் படலங்களை உடைத்தெறியும் ஆற்றல் கொண்ட இது, பல பாரம்பரிய நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை விடச் சிறப்பாகச் செயல்பட்டுத் தீவிரத் தொற்றுகளைக் கட்டுப்படுத்துகிறது.

அசாம் தட்டான் பூச்சி இனக் குழப்பம் தீர்வு

அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் காணப்படும் Dysphaea assamensis தட்டான் பூச்சி இனம் குறித்துப் பல தசாப்தங்களாக இருந்துவந்த வகைப்பாட்டியல் குழப்பத்திற்கு விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். மியான்மரில் கண்டறியப்பட்ட மற்றொரு இனத்துடன் குழப்பப்பட்டு வந்த இந்த உயிரினத்தின் நுட்பமான வேறுபாடுகள் பல நிறுவனங்களின் கூட்டு ஆராய்ச்சியால் துல்லியமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உலகின் முதல் பழமுண்ணி டைனோசர் கண்டுபிடிப்பு

சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பழங்களை மட்டுமே பிரதான உணவாகக் கொண்ட Infernogallus jamesi என்ற புதிய வகை டைனோசர் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‘நரகக் கோழி’ என அழைக்கப்படும் 5 அடி நீளமுள்ள இந்தத் தேரோபாட் டைனோசருக்குப் பற்கள் இல்லை; மாறாக, பழங்களை நசுக்கக் கிளிகளைப் போன்ற கூர்மையான அலகும் சிறப்பான தாடையும் உள்ளது.

பூமிக்கு உயிரைக் கொண்டுவராத வால் நட்சத்திரங்கள்

பூமியில் உயிரினங்கள் உருவாவதற்குத் தேவையான மூலக்கூறுகளை வால்க நட்சத்திரங்கள் கொண்டுவந்தன என்ற கோட்பாட்டை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு மறுத்துள்ளது. வால்க நட்சத்திரங்களின் அதிவேக மோதல்களால் ஏற்பட்ட அதிகப்படியான வெப்பத்தால், அவற்றுள் இருந்த கரிம மூலக்கூறுகள் பூமியை அடைவதற்கு முன்பே முற்றிலும் ஆவியாகி அழிந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஷமோண்டா வைரஸ் தொற்றுக் கண்டறிதல்

கால்நடைகளைத் தாக்கும் ஷமோண்டா வைரஸ் பிரான்சில் மனிதர் ஒருவரிடம் முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அந்த நபர் உயிரிழந்துள்ளார். பூச்சிகள் மூலம் பரவும் இந்த வைரஸ் 1960-களில் நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெர்ராகோட்டா படைகளின் உருவாக்கம்

சீனாவின் டெர்ராகோட்டா போர்வீரர் சிலைகளில் உள்ள 79 விரல்ரேகைகளில் 45% ஆண்களின் ரேகைகளும், 33% பெண்களின் ரேகைகளும் உள்ளன. மீதமுள்ள 22% பதினைந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ரேகைகளாகும். சிலைகளை உருவாக்கப் பெண்களும் குழந்தைகளும் உதவியுள்ளனர் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.