பண்ணவாடி பகுதியை சூழல் சுற்றுலாத்தலமாக அறிவிக்க அறிவியல் இயக்க சேலம் மாநாடு வலியுறுத்தல்
22 Dec 2025, 4:02 am
<p>சேலம், டிச.22- மேட்டூர் அணை பண்ணவாடி பகுதி யில் அரிய வெளிநாட்டு பறவைகள் அதி களவில் வந்து செல்லும் இடமாக உள்ள தால், இப்பகுதியை சூழல் சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் சேலம் மாவட்ட 17-வது மாநாடு மேட்டூரில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் தோமி னிக் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டை, மாநிலச் செயலாளர் ராம மூர்த்தி தொடக்கி வைத்து உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் சுரேஷ் சங்கத்தின் செயல்பாட்டு அறிக்கை களை முன்வைத்தார். இதில், மேட்டூர் அணை பண்ணவாடி பகுதிக்கு அதிக அளவில் வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகின்றன. எனவே, இப்பகுதியின் பல்லுயிர் சூழ லைப் பாதுகாக்கும் வகையில், பண்ண வாடியை சூழல் சுற்றுலாத் தலமாக அரசு அறிவிக்க வேண்டும். தாரமங்கலம் நகராட்சி மையப் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளியை, அரசு உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். தாரமங்கலம் நகராட்சியில் அரசு உயர்நிலை அல்லது மேல் நிலைப் பள்ளிகள் இல்லாததால், மாண வர்கள் 5 கி.மீ தொலைவில் உள்ள கிரா மப்புற பள்ளிகளுக்கு செல்ல வேண் டிய அவலநிலை உள்ளது. சுமார் 650 மாணவர்கள் பயிலும் சேலம் ஊரகம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்த வேண்டும். மாணவர்களின் உடல்நலன் கருதி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலி யாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மேட்டூர் அனல் மின் நிலையப் பொறியாளர் அனுராதா லக்ஷ்மி நரசிம்மன், தமுஎகச மாவட்டச் செயலாளர் சோபனா, அரசு ஊழியர் சங்க தாலுகா செயலாளர் சிங்கராயன், வழக்கறிஞர் சரவணபரத் உள்ளிட் டோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட் டில் “அறிவியலை அறிவோம், அறிவிய லால் இணைவோம்” என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் முனைவர் திருநாவுக் கரசு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவராக தோமினிக், செயலாளராக வெங்கடே சன், பொருளாளராக செங்கோடன் மற் றும் 101 பேர் கொண்ட பொதுக்குழு வும், 41 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டன. புதிய நிர்வாகி களை அறிமுகப்படுத்தி மாநிலப் பொதுச்செயலாளர் முகமது பாதுஷா உரையாற்றினார். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தெவிட்டா மணி நன்றி கூறினார்.</p>
