தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்விக்கு ஜிடிபி-யில் 6% நிதி ஒதுக்க அறிவியல் இயக்க கல்வி உபகுழு வலியுறுத்தல்

14 Dec 2025, 3:45 pm
கல்விக்கு ஜிடிபி-யில் 6% நிதி ஒதுக்க அறிவியல் இயக்க கல்வி உபகுழு வலியுறுத்தல்
<p><strong>கல்விக்கு ஜிடிபி-யில் 6% நிதி ஒதுக்க அறிவியல் இயக்க கல்வி உபகுழு வலியுறுத்தல்</strong></p> <p>திருப்பூர், டிச.14- ஒன்றிய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் ஆறு சதவிகிதத்தை கல்விக்கு ஒதுக்குவது டன், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழு மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழுவின் மாநில மாநாடு திருப்பூர் அம்மா பாளையம் பகுதியில் உள்ள ஸ்ப்ரௌட்ஸ் பள்ளி யில் டிசம்பர் 13, 14 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. &nbsp;இம்மாநாட்டிற்கு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர். திருநாவுக்கரசு தலை மை ஏற்றார். மாநில பொதுச் செயலாளர் முகமது &nbsp;பாதுஷா துவக்கி வைத்தார். மாநில கல்வி உப குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் மாதவன் எதிர்கால திட்டங்களை முன்வைத்து பேசினார். &nbsp;இதில் வகுப்பறை ஜனநாயகம், தேசிய கல்வி கொள்கை ஏற்படுத்திய தாக்கங்கள், சிக்க லில் உயர்கல்வி, கல்வி உபகுழு முன்னெடுத்த முன்மாதிரி செயல்பாடுகள் உள்ளிட்ட தலைப்பு களில் கருத்தரங்கமும், விவாதங்களும் நடை பெற்றது. பள்ளிகளில் ஜனநாயகச் செயல்பாடுகள் அவசியம் இம்மாநாட்டில், நிநைறவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஒன்றிய அரசு கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்திற்கு குறை வில்லாமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். &nbsp;பள்ளிகளில் சாதி பாகுபாடு காரணமாக ஏற்படும் வன்முறை நிகழ்வுகளை கவலை யோடு பார்ப்பதுடன், இவ்வாறான பாகுபாடு களை குறைக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்விஷ யத்தில் அரசு கூடுதல் முனைப்புடன் செயல்பட வும், பள்ளிகளில் ஜனநாயக செயல்பாடு களை ஊக்குவிக்கவும், அரசியலமைப்பு மன்றங்களை உருவாக்கவும் கேட்டுக்கொள் கிறது. &nbsp;ஆசிரியர்கள் பணிப் பளு தொடர்ந்து அதி கரித்து வருகிறது. தொடர் மின்னணு மேலாண்மை ஆசிரியர்களை பொறுமை இழக்க செய்கிறது. இது கற்றல் கற்பித்தல் செயல் பாடுகளில் கவனம் செலுத்துவதற்கு தடையாக உள்ளது. ஆசிரியர்களை நம்பி வகுப்பறைகள் இயங்க அனுமதிக்கவும், ஆசிரியர்கள் சுதந்திர மாக செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். &nbsp;அறிவியல் மனப்பான்மை தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களி டையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக கல்வி செயல்பாடுகள் குறிப்பிட்ட இடைவெளியில் நடத்த வேண்டி யது அவசியம். மாணவர்களிடம் மட்டுமின்றி, &nbsp;பொதுமக்களிடமும் அறிவியல் மனப்பான்மை யை வளர்க்க கல்வி செயல்பாடுகளை கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்கள் மற்றும் மக்களி டையே ஒற்றுமையை வளர்க்கும் ஒரே ஆயுதம் அறிவியல் மனப்பான்மை தான். அத்தகைய ஒற்றுமையை வளர்க்கக்கூடிய கல்வி செயல் பாடுகளை வருங்காலத்தில் முன்னெடுக்கவேண்டும். பள்ளி மாணவர்களிடையே சாதி ரீதியான வித்தியாசத்தை உருவாக்கும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் மாணவர்கள் மனதில் ஒற்றுமை யை ஏற்படுத்தும் வண்ணம், அத்தகைய புரித லை ஏற்படுத்தும் வகையில், கல்வி மற்றும் உரை யாடல் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். முறையான திட்டமிடலோடு மாநிலம் &nbsp;முழுவதுமான செயல்பாடாக இதை முன்னெடுக்க வேண்டும். &nbsp;தமிழக அரசின் முன்னெடுப்பால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் மிகப்பெரும் நூலகங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நூலகங்களை மிகச் சரியாக பயன்படுத்தி மாணவர்கள் மற்றும் மக்க ளிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் சாத்தியமுள்ள நகரங்களில் நூலகங்களில் திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும். உயர்கல்வியில் ஏற்பட்டுள்ள சிக்க லை தீர்க்க, பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விவாதித்து உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். &nbsp;அனைத்து நகரங்களிலும், மாநில அளவிலும் பேராசிரியர்கள் இணையத்தை உருவாக்க வேண்டும். அதன் மூலம் மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் வண்ணம் உரையாடலை கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி சார்ந்த கல்வியாளர்கள், வல்லுநர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். (ந.நி.)<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.