அரசுப்பள்ளியில் அறிவியல் திருவிழா
27 Dec 2025, 6:08 pm
<p><strong>அரசுப்பள்ளியில் அறிவியல் திருவிழா</strong></p>
<p>உடுமலை, டிச.27- மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளியன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பெற் றோர் மாணவர் அறிவியல் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மடத்துக்குளம் வட்டார கல்வி அலுவலர் பழனிசாமி தலைமை வகித்தார். மடத்துக்குளம் அறிவியல் இயக்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, சிவஞானம் குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் மாணவர்களின் படைப்புகள், சிலம்பம், அடுப்பில்லாத உணவுத் திருவிழா நடைபெற்றது. வானவில் மன்றத்தில் பங்கு பெற்ற மாண வர்கள் எளிய அறிவியல் சோதனைகள் செய்து காண்பித்து விளக்கம் அளித்தனர். இறுதியாக துளிர் வினாடி வினா போட்டி யில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரி சுகளும் வழங்கப்பட்டன.</p>
