சிதம்பரம் வீனஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
7 Dec 2025, 3:52 pm
<p><strong>சிதம்பரம் வீனஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி</strong></p>
<p>சிதம்பரம், டிச.7- சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பல துறைகளின் அறிவு திறன்களை ஒரே மேடையில் வெளிப்படுத்தும் விதமாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறி வியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பல பிரிவுகளில் மாணவர்கள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பது, பரத, சிலம்ப கலை மாண வர்கள் தங்கள் துறைக ளின் பெருமையை பெற்றோர் களுக்கும், மாணவர்க ளுக்கும் வெளிப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தி னர். மாணவர்களின் படைப்பு களை பள்ளியின் தாளாளர் சா.குமார், துணை தாளாளர் ரூபியாள்ராணி மற்றும் பள்ளியின் முதல்வர் லியோ பெஸ்கி ராவ் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்து களை கூறி பாராட்டு சான்றுகளை வழங்கி னார்கள். கண்காட்சியில் மிருக காட்சி சாலை மாதிரி அமைக்கப்பட்டதை கண்டு மாணவர்கள் உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.</p>
