சிதம்பரம் அரசினர் மகளிர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
18 Feb 2026, 3:04 pm
<p><strong>சிதம்பரம் அரசினர் மகளிர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி</strong></p>
<p>சிதம்பரம், பிப். 18- சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அறிவியல் மற்றும் மின்னியல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகச் சிதம்பரம் நகர்மன்றத் துணைத் தலைவர் எம். முத்துக்குமார் கலந்துகொண்டு, மாணவிகள் தயாரித்த அறிவியல் மற்றும் மின்னியல் மாதிரிகள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பார்வையிட்டுப் பாராட்டினார். மாணவிகளின் ஆர்வம் மற்றும் புதுமையான சிந்தனையைப் பாராட்டிய அவர், எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக உயர வேண்டும் என வாழ்த்தினார். மேலும், சமூக ஆர்வலரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியருமான டி.எஸ்.எஸ். ஞானகுமார் மாணவிகளுக்குக் கல்வியின் முக்கியத்துவம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்துச் சிறப்பு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் கண்ணகி, உதவித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கண்காட்சி மாணவிகளிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் சிறந்த முயற்சியாக அமைந்ததாகப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தெரிவித்தனர்.</p>
