சிறுமியின் பிறந்த நாள் பரிசாக அறிவியல் இயக்க வீட்டு நூலகம்
10 Mar 2026, 3:51 pm
<p><strong>சிறுமியின் பிறந்த நாள் பரிசாக அறிவியல் இயக்க வீட்டு நூலகம்</strong></p>
<p>மார்த்தாண்டம், மார்ச் 10- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லம் தோறும் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறிவியல் இயக்கத் தின் கிள்ளியூர் ஒன்றிய தலைவர் ஜோஸ் பால் இல்லத்தில் அவரது மகள் அருள் ஜெசிக்கா பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் நூலகம் அமைக்கப்பட்டது. ஜோஸ் பால் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் சசிக்குமார் புத்தகம் குறித்த பாடல் பாடி புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார். கிள்ளியூர் ஒன்றிய செயலா ளர் ஜெசி, மாநில செயற்குழு உறுப்பினர் புஷ்பலதா, பேராசிரியர் பாப்பா, மாவட்டச் செயலாளர் ஜெனித், திருவட்டார் ஒன்றியத் தலைவர் கார்த்திக்கேயன் வாழ்த்திப் பேசி னர். மாவட்டத் துணைத் தலைவர் புத்த கங்களின் சிறப்புகள் குறித்து பேசி நிறை வுரையாற்றினார். சிறுமியின் உறவினர்கள், துளிர் இல்லக் குழந்தைகள் அனைவரும் பிறந்தநாள் பரிசாக புத்தகங்கள் வழங்கிப் பாராட்டினர். பின்பு நூலகம் உருவாக்கப் பட்டது. அருள் ஜெசி நன்றி கூறினார்.</p>
