முந்தய பக்கம்

போகலூர் பள்ளியில் அறிவியல் தின போட்டிகள்

27 Feb 2026, 5:32 pm
போகலூர் பள்ளியில் அறிவியல் தின போட்டிகள்
<p><strong>போகலூர் பள்ளியில் அறிவியல் தின போட்டிகள்</strong></p> <p>இராமநாதபுரம், பிப்.27- தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் தினப் போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்வுக்கு வட்டார தலைவர் மலைச்சாமி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் &nbsp;குமரேசன் வர வேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு போகலூர் வட்டார கல்வி அலுவலர் வளர்மதி பரிசு வழங்கி பாராட்டிப் பேசினார். மாண வர்களை வட்டார வள மைய மேற்பார்வையாளர் திலகரா ஜன், சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) ராஜபாண்டி, ஆசிரியர் பயிற்றுநர்கள் பாலமுருகன், சசிகலா, பட்டிமன்ற பேச்சாளர் துரைப்பாண்டியன் ,அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் கு.காந்தி &nbsp;கருத்துரையாற்றினார். வட்டார பொருளாளர் ரூபன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram