மிரட்டும் குளிர் ஜம்மு- காஷ்மீரில் பள்ளிகளுக்கு விடுமுறை
27 Nov 2025, 3:11 pm
<p>நாட்டில் குளிர்காலம் நெருங்கிய நிலையில், இமயமலையில் உள்ள ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வருகிறது. பெரும்பாலான இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்சியசாக பதிவானது. இத னால் ஜம்மு- காஷ்மீர் மக்கள் இயல்பு நிலை இழந்துள்ளனர். இந்நிலையில் ஜம்முவின் குளிர் மண்டலம் மற்றும் காஷ்மீர் பள்ளத் தாக்கில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறைக்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி நர்சரி மற்றும் கேஜி வகுப்பு களுக்கு பிப்ரவரி 28 வரை 3 மாதங்களும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை டிசம்பர் 1 முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரையிலும், 9 மற்றும் 10ஆம் வகுப்பு களுக்கு டிசம்பர் 11 முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் எந்தவொரு கல்வி பணிக்கும் தயாராக இருக்க வேண்டும், பள்ளியை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வரும் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் வர வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் பள்ளி கல்வித்துறை அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.</p>
