தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநகராட்சி பள்ளி ஊழியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் சென்னை பொது தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

23 May 2026, 12:57 am
மாநகராட்சி பள்ளி ஊழியர்களுக்கு  மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் சென்னை பொது தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
<p><strong>மாநகராட்சி பள்ளி ஊழியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் சென்னை பொது தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>சென்னை,மே 22- மாநகராட்சி பள்ளி ஊழி யர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என சென்னை பொது தொழி லாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.லோக நாதன் தலைமையில் மாநக ராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மே மாதம் வந்தாலே சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் என்யூஎல்எம் திட்ட ஊழியர்களுக்கு சம்ப ளம் இல்லை என்ற அதிர்ச்சி கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் வந்துள்ளது. சென்னை மாநகராட்சியின் பள்ளிகளில் தூய்மை பணி மற்றும் உதவியாளர்களாக பணிபுரியும் ஊழியர் களுக்கு மே மாதம் பள்ளி விடுமுறை என்பதால் சம்ப ளம் இல்லை என சென்னை மாநகராட்சியின் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே போல் ஒரு உத்தரவை கல்வித்துறை வெளியிட்ட பிறகு சென்னை பொதுத் தொழிலாளர் சங்கம் உடனடி யாக தலையிட்டு அந்த ஊழி யர்களுக்கு மீண்டும் சம்ப ளம் கிடைக்க வழிவகை செய்தது. புதிதாக பதவி ஏற்றுள்ள தமிழக அரசு மாநகராட்சி கல்வி அதிகாரியிடம் வழக்கம் போல் இந்த ஆண்டும் பள்ளி ஊழியர் களுக்கு சம்பளம் வழங்க நட வடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாநகராட்சி ஆணையர் சமீரன், கோரிக் கைகளை முழுமையாக கேட்டு, தனிப்பட்ட முறை யில் தானே இது குறித்து நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.