முந்தய பக்கம்

பள்ளி மாணவர்களுக்கான கையுந்து பந்து போட்டி

3 Oct 2026, 12:04 am
பள்ளி மாணவர்களுக்கான கையுந்து பந்து போட்டி
<p><strong>பள்ளி மாணவர்களுக்கான கையுந்து பந்து போட்டி</strong></p><p>தஞ்சாவூர், அக். 2- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்ட அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கையுந்துபந்து போட்டி, குருவிக்கரம்பை மடத்துவாசல் திடலில் நடைபெற்றது.</p><p>குருவிக்கரம்பை முனுமாக்காடு தொப்பை பாய்ஸ் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் புதுப்பட்டினம் அபு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.போட்டியில் வென்று பரிசு பெற்ற மாணவர்களை மருத்துவர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் ராம், விளையாட்டு பயிற்றுநர் பாராட்டினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram