திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பள்ளி மாணவர்கள் அவதி
30 Nov 2025, 4:29 pm

திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பள்ளி மாணவர்கள் அவதி

ராணிப்பேட்டை, நவ.30- வாலாஜா ஊராட்சி ஒன்றியம், பூண்டி ஏரியை ஒட்டியுள்ள அணைக்கட்டு சாலை (காவேரிப்பாக்கம் மற்றும் வாலாஜா பகுதிகளை இணைக்கிறது) ஓரத்தில் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதால், அவ்வழியைப் பயன்படுத் தும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.இந்தச் செயலால் அப்பகுதியில் வசிப்பவர்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது. சாலை கள் மற்றும் நீர்நிலைகள் அசுத்தமடைந்து, ஒட்டுமொத்தப் பகுதிக்கும் நோய்த்தொற்று அபாயம் உள்ளது. குறிப்பாக, நான்கு சக்கர வாகனங்கள் கடக்கும்போது ஒதுங்கும் வாகன ஓட்டிகள் மீது மலக் கழிவுகள் விழவும், விபத்துகள் ஏற்பட வும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கட்டாயம் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் “தூய்மை இந்தியா” போன்ற திட்டங்கள் மூலம் அனைவருக்கும் கழிப்பறை வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், சாலை யோரம் வளர்ந்துள்ள முட்புதர்களை சுத்தம் செய்து, சாலையை விரிவுபடுத்த மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள் ளனர்.