தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவியல் மையம், பொருநை அருங்காட்சியகத்திற்கு பள்ளி மாணவர்கள் களப்பயணம்

22 Jan 2026, 2:57 pm
அறிவியல் மையம், பொருநை அருங்காட்சியகத்திற்கு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
<p><strong>அறிவியல் மையம், பொருநை அருங்காட்சியகத்திற்கு பள்ளி மாணவர்கள் களப்பயணம்</strong></p> <p>திருநெல்வேலி, ஜன.22- முன்னேற விளையும் வட்டாரத் திட்டத்தின் கீழ் நான்கு நேரி வட்டாரத்தில் உள்ள தொடக்க நடுநிலை ப்பள்ளி மாணவர்கள் திருநெல்வேலி அறிவியல் மையம் பொருநை அரு ங்காட்சியகத்திற்கு களப் பயணம் மேற்கொண்டனர். நாங்குநேரி வட்டார கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாண வர்கள் 200 பேரை முன்னேற விளையும் வட்டார திட்டத் தின் கீழ் களப்பயணம் அழை த்துச் செல்ல மாவட்ட ஆட்சி யர் சுகுமார் உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் &nbsp;வழிகாட்டுதலின்படி 100 மாணவ,மாணவிகள் திரு நெல்வேலி அறிவியல் மையம் மற்றும் பொருநை அருங்காட்சியகத்திற்கு பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர். அறிவியல் மையத்தில் கோளரங்களில் கோள்க ளின் இயக்கம், 3டி கண்காட்சி கள் விந்தை அறிவியல் கண் காட்சிகள் ,ராக்கெட் ஏவுதல் தத்துவம் செயல்முறைகள் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட &nbsp;துணை ஆட்சியர் &nbsp;தேவ்லந்து (பயிற்சி) தலை மையில் திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் &nbsp;சிவக்குமார் முன்னிலையில் நாங்குநேரி வட்டார அளவில் நடை பெற்ற கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற &nbsp;மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கினார். அனைத்து மாணவர்க ளுக்கும் பொருநை அருங் காட்சியகம் அகழ்வாரா ய்ச்சி நிகழ்வுகள் காண் பிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.