திருச்சி விரைவு செய்திகள்
26 Dec 2025, 4:32 pm

டிச.29 முதல் கால்நடைகளுக்கு கால்-வாய்க்காணை நோய் தடுப்பூசி

இராமநாதபுரம், டிச.26- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: கால் மற்றும் வாய்காணை நோயானது நாட்டினம் மற்றும் அயலின கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்நோயி னால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலை திறன் குறைவு, கறவைமாடுகளின் சினைப்பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படுகிறது. எனவே, கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய்கா ணை நோயினை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 8-வது சுற்று 29.12.2025 முதல் 28.01.2026 வரையிலும் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடை வளர்ப்போர்கள் தங்களது கால்நடைகளை அவர்களது கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு கால்நடை வளர்ப்போர் பொருளாதாரம் மேம்படும் வண்ணம் அனைவரும் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மெக்கானிக் கடையில் திருட்டு : சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

சாத்துர், டிச.26- சாத்தூர் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் செந்தூன்( 36). மேலக் காந்தி நகரில் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவரது கடையின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ7ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர், சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார. அதன்பேல் விசாரணை நடத்திய போலீசார், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆண்டாள்புரத்தை சேர்ந்த தென் ஹரிஹரன் (24). மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தனர்.

பள்ளி மாணவர், பாட்டியை கத்தியால் குத்தியவர் கைது

விருதுநகர், டிச.26- விருதுநக அருகே உள்ளது நக்கலக்கோட்டை. இப்பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்(48) .இவர் மது போதையில் அவ்வழியாக வந்த 10 ஆம் வகுப்பு மாணவரை வழிமறித்து கத்தியால் தாக்கினார். அதை தடுக்கச் சென்ற மாணவரின் பாட்டி ராஜலட்சுமியையும் (65) கத்தியால் வெட்டினார். இருவரும் விருதுநகர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.

பாரபட்சமின்றி அனைவருக்கும் கூட்டுறவு வங்கியில் விவசாயக் கடன் வழங்கிடுக!

இராமநாதபுரம், டிச.26 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.முத்துராமு பேசியதாவது: கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதில் குளறுபடி உள்ளது. கடந்த ஆண்டு வாங்கி கடனை திருப்பிச்செலுத்தி கடனுக்கு விண்ணப் பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உடனே கடன் வழங்க வேண்டும். அதைப் போல இராமநாதபுரம் மாவட்டத்தில் பல கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு புதிய விவசாய கடன் மறுக்கப்படுகிறது. திருவாடானை வட்டம் மங்கலக்குடி உள் வட்டத்தில் ஜனவரி மாதத்துக்குள் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதிகளில் போதிய மழை இல்லாததால் பயிர்கள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் உடனே கணக்கீட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.மயில்வாகணன் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களில் யூரியா வாங்க சென்றால் அதனுடன் துணை உரம் வாங்கினால் மட்டுமே யூரியா தர முடியும் என கூட்டுறவு நிர்வாகம் விவசாயிகளை கட்டா யப்படுத்துகிறது. இதன் மீது மாவட்ட நிர்வா கம் உடனே தலையிட்டு விவசாயிகளுக்கு தடையின்றி யூரியா உரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் . 2018- 2019 ஆண்டு களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் இன்சூரன்ஸில் கடலாடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இராமநாதபுரத்தில் பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்த 100க்கும் மேற்பட்டோருக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் இன்சூரன்ஸ் தொகை இன்று வரை வரவு செய்யப்படவில்லை. இது தொ டர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் நீதிமன்றத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விவசாயிகளின் வங்கி கணக்கில் பயிர் இன்சூரன்ஸ் தொகையை உடனே வரவு வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.ஆனால் இன்று வரை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொகை யை வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . முது குளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய பகுதிகளில் போதிய மழை இல்லாததால் வருவாய்த் துறையும், வேளாண் துறையும் உடனே மறு கணக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.