பள்ளி கட்டுமானப் பணிகள் ஆய்வு
3 Feb 2026, 4:00 pm
<p><strong>பள்ளி கட்டுமானப் பணிகள் ஆய்வு</strong></p>
<p>கோவை, பிப்.3- உடையாம்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டுமானப் பணி களை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட் பட்ட உடையாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாநில நிதிக் குழு (SFC) திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில், தரை தளத்தில் 4 வகுப்பறைகள் மற்றும் முதல் தளத்தில் 4 வகுப்பறைகள் என மொத்தம் 8 புதிய வகுப் பறைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை செவ்வாயன்று நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், கட்டுமானத்தின் தரம் குறித்து அதி காரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், இப்பணிகளை எவ் வித தொய்வுமின்றி விரைவாக முடித்து, உரிய காலத் திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் அலுவலர்க ளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற குழுத் தலைவர் உறுப்பினர் வெ. ராமமூர்த்தி, மாநகராட்சி தலைமைப் பொறியாளர் விஜ யகுமார், உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் முருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர் கள் உடனிருந்தனர்</p>
