தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளி வாகனங்கள் தணிக்கை

13 May 2026, 1:39 am
பள்ளி வாகனங்கள் தணிக்கை

பள்ளி வாகனங்கள் தணிக்கை

திருப்பூர், மே 12 - கோடை விடுமுறைக்கு பின்னர், கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்க உள்ள நிலையில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி துவங்கியது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூ ரில் வாகனத் தணிக்கை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரண வரே பங்கேற்று ஆய்வு செய்தார். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கே யம், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட வட்டாரப் போக்கு வரத்து அலுவலகங்களி

ன் எல்லைக்கு உட்பட்ட 232 தனியார் பள்ளிகளில் இருந்து முதல் கட்டமாக 420 பேருந்துகள், வேன்கள் ஆய்வுக்கு கொண்டு வரப் பட்டது.

இந்த வாகனங்களில் அவசர வழி கதவுகள், முதலுதவி சிகிச்சை பெட்டிகள், பிரேக், டயர்கள், ஜன்னல் கம்பிகள் மற்றும் படிக்கட்டுகளின் உயரம் ஆகியவை விதிகளின்படி இருக்கின்றனவா என தணிக்கை செய்யப்பட்டது.

அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளனவா எனவும் ஆய்வு செய்யப் பட்டது.

மேலும் சிறிய குறைபாடுகள் உள்ள 10 பள்ளி வாக னங்கள் குறைபாடுகளை சரி செய்த பின்னர் மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அனைத்து வாகன ஓட்டுநர்களின் முன்பு பேசிய ஆட்சியர் மனிஷ் நாரணவரே, வாகன ஓட்டு நர்கள் அனைவரும் கண் பரிசோதனை செய்து கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குட் பட்ட 32 பள்ளிகளில் இயக்கப்படும் 415 பள்ளி வாக னங்கள் செவ்வாயன்று தணிக்கை செய்யப்பட்ட னர்.

திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்லூரி வளாகத் தில் இந்த ஆண்டு தணிக்கை நடைபெற்றது.

இந்த தணிக்கையில் திருச்செங்கோடு வருவாய் கோட் டாட்சியர் லெனின் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பெட்டி உள்ளிட்ட 23 வகையான விஷயங்கள் சரி பார்க்கப்பட்டு தகுதி சான்று வழங்கப்பட்டது.

குறை பாடு உள்ள 32 வாகனங்களின் குறைகளை சரி செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறைகள் சரி செய்த பிறகு அவர்களுக்கு தகுதி சான்று வழங்கப் படும் என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித் தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.