திருச்சி விரைவு செய்திகள்
6 Dec 2025, 6:20 pm

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

பாபநாசம், டிச.6 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி புவனேஸ்வரி, துணைத் தலைவி கேத்ரின் விமலா முன்னிலை வகித்த னர். இதில் மாணவர்களின் செயல்பாடுகளை ஊக்கு வித்தல், மாணவர்களை பள்ளியில் தக்க வைத்தல், சிறப்பு குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்தல், பேரிடர் மற்றும் குளிர்கால நடவடிக்கை எடுத்தல், பள்ளி சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்தல், ஆதார் கார்டை புதுப்பித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின. இதில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர்.

குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து பேரணி

புதுக்கோட்டை, டிச.6 - புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இன்டராக்ட் சங்கம் இணைந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து புதுக்கோட்டையில் சனிக்கிழமை பேரணி நடத்தின. புதுக்கோட்டையை அடுத்த மேட்டுப்பட்டியில் துவங்கிய பேரணிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.இளங்கோ தலைமை வகித்தார். பேரணியை ரோட்டரி மாவட்டச் செயலாளர் கனகராஜன் துவக்கி வைத்தார். முன்னதாக ரோட்டரி சங்க செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்க, திட்ட தலைவர் பள்ளி ஆலோசகர் ராஜராஜன் நன்றி கூறினார்.

அதிகளவு மின்னணு பயணச்சீட்டு பயன்படுத்திய நடத்துநர்களுக்கு பரிசு

கும்பகோணம், டிச.6- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோ ணம் தலைமையகத்தில் அதிகளவில் மின்னணு பயணச் சீட்டு பயன்படுத்திய நடத்துநர்களுக்கு நிர்வாக இயக்கு நர் கே.தசரதன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட 6 மண்டலங்களில் பணியாற்றுகிற நடத்துநர்கள் பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அதிகள வில் மின்னணு இயந்திரம் மூலம் பணமில்லா பரிவர்த்தனை கள் (Digital Payment / UPI/ Card) செய்தமைக்காக நடத்துநர்கள் கணேசன், இராமலிங்கம், முருகன், பால சுப்பிரமணியன், நந்தகுமார் மற்றும் கலைவாணன் ஆகி யோருக்கு நிர்வாக இயக்குநர் பரிசுகள் வழங்கி பாராட்டி னார். கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்கள், விபத்தில் காயமடைந்த பணி யாளர்கள், பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்கள் என 5 குடும்பங்களுக்கு என ரூ.4.50 லட்சம் மதிப்பில் நிதி யுதவி வழங்கினார்.

வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

பாபநாசம், டிச.6 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே தியாக சமுத்திரம் ஊராட்சி யில், பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட சுகா தார கட்டடம், சத்திய மங்கலம் ஊராட்சி, வாழ்க்கை கிராமத்தில் 15 ஆவது நிதிக் குழு மானியத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு உள்ள துணை சுகாதார நிலையம், முதலமைச்ச ரின் வீடுகள் மறு கட்ட மைப்புத் திட்டம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் ஆகிய திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடுகளை தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் முனைவர் பாலகணேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கூனஞ் சேரி ஊராட்சி மன்ற அலு வலகத்தில் மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். ஆய்வின் போது பாப நாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், ஒன்றியப் பொறியாளர்கள், பணி பார்வையாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் உடனி ருந்தனர்.