அழிவின் காட்சி! - கோவி.பால.முருகு
31 Oct 2026, 9:38 pm

அழிவின் காட்சி! - கோவி.பால.முருகு

தேசப் பற்று என்றே கூவுவார்

தேசக் கேட்டினை இங்கே மேவுவார்

மாசாய் இருக்கும் மதவெறி கொள்வார்

மனத்தால் நல்லவர் போலவே செல்வார்

கூசா வாயால் பொய்யே உதிர்ப்பார்

குறிக்கோள் கொண்டவர் போலவே குதிப்பார்!

பேசா மடமை முதன்மை பெற்றார்

பெருமை அனைத்தையும் பெயரோ டழிப்பார்.

ஆண்டு பலவாய் ஆட்சி செய்கிறார்

ஆற்றலால் மக்கள் தலையைக் கொய்கிறார்

மாண்டவர் கோடியாய் மோதலில் மகிழ்கிறார்

மணிப்பூர் மக்களைக் கொல்வதில் நெகிழ்கிறார்

தீண்டும் மதவெறி சாதியைக் கொள்கிறார்

திக்கெலாம் பரப்பியே வெறுப்பில் துள்கிறார்

யாண்டும் பொய்யுடன் சூதையும் விதைக்கிறார்

யாவிலும் உயர்ந்தது நாடெனக் கதைக்கிறார்.

வெற்றிகள் எல்லாம் வேண்டா வழியில்

விலையாய்ப் பெற்றதோ விடிவாம் அழிவில்

குற்ற உணர்வே சிறிதும் இல்லார்

கொடியோர் ஆட்சியில் அறத்தைக் கொல்வார்

தெற்றென அவர்வழித் தீங்கெனத் தெறியும்

தேர்தலில் வெற்றியைப் பெறுவதை அறியும்

முற்றிலும் நாடு கெட்டிடச் செய்கிறார்

முதலாய் வெறுப்பு அரசியல் நடத்துறார்.

அரசுத் துறைகளைத் தாரை வார்க்கிறார்

அவரிடம் நிதியாய் அள்ளிக் குவிக்கிறார்

உரசும் செயல்களால் ஒற்றுமை குலைக்கிறார்

உதவா வேலைகள் அனைத்தும் செய்கிறார்

சிரசில் மணிமுடி சூட நினைக்கிறார்

சிந்தையில் மன்னர் ஆட்சிபோல் ஆள்கிறார்

பரவிடும் நோயாய் பலவும் நடத்துறார்

பண்பிலார் சூதால் பதவியில் தொடர்கிறார்.

அரசிய லமைப்புச் சட்டம் மதிக்கார்

அதற்கு எதிராய் அனைத்திலும் குதிப்பார்

வரலாற் றுண்மை மறைத்திடப் பார்ப்பார்

வைய விடுதலைப் போரெனில் வியர்ப்பார்

அரவாய் பல்லில் நஞ்சின் படையார்

அறையும் வாயில் பொய்மை உடையார்

கரவு மனத்தால் கலகம் செய்வார்

காவி நிறத்தை அனைத்திலும் பெய்வார் .

வள்ளுவர் உடையில் காவியைப் பூசுவார்

வள்ளலார் சனாதன வாதி யென்பார்

தெள்ளு தமிழ்மொழி தீய்ந்திட எண்ணுவார்

தென்னக மக்களைத் திருடரென் றுரைப்பார்

கள்ளத் தனத்தைக் கையில் கொள்வார்

காட்சியில் நல்லவர் போலவே இருப்பார்

உள்ளுவ தெல்லாம் உழைப்பை அழிக்கும்

ஊழலை மறைத்து உலகில் நடிக்கும்!

பாரதிப் பாடலைப் பாடிக் கெடுப்பார்

பார்புகழ் வள்ளுவன் குறளைக் கெடுப்பார்

ஆரத் தமிழை அணைப்பதாய் நடிப்பார்

அள்ளியே கொடுத்து வடமொழி வளர்ப்பார்

சேராத் தீமை சேர்ந்திடச் செய்வார்

செழிக்கும் மனித நேயம் அழிப்பார்

வாராக் கொடுமை வந்திட மகிழ்வார்

வாயால் வடையைச் சுட்டுத் தருவார்!

பொதுத்துறை நிறுவனம் போக்கிட அழிப்பார்

போற்றும் அவரின் நண்பர்க் களிப்பார்

எதுயெது நன்மை யோயதனை ஒழிப்பார்

ஏற்றம் காண்பதை எண்ணியே பார்க்கார்

பதுங்கும் புலியவர் பசுத்தோல் அணிவார்

பாய்வார் பின்னே பசுத்தோல் களைவார்

எதுவும் நல்லதைச் செய்யா ஆட்சி

இருப்பது நாட்டின் அழிவின் காட்சி!