தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

27 Oct 2026, 10:26 pm
ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

முடக்கம்

திரிபுரா மாநிலத்தில் ரேசன் கடையில் மாவுக்கு என்ன நிர்ணயித்தீர்கள் என்றுதகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிபிஎம் கட்சி உறுப்பினர் ஒருவர் கேட்கிறார். நிர்வாகத்திடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. மேல்முறையீடு செய்கிறார். ஒன்றும் நடக்கவில்லை. விசாரித்தால், பெரும்பாலான தகவல்கள் எதுவுமே தரப்படுவதில்லை என்ற செய்தி கிடைத்தது. ரேசன் கடைகளில் ஆங்காங்கே ஆளும் கட்சிக்காரர்களுடன் கைகோர்த்துக் கொண்டு தங்கள் விருப்பப்படியான விலைகளை வைத்துள்ளனர். அதுவும் தசராக் கொண்டாட்டங்களின்போது வெளிச் சந்தையில் விற்று விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கூடுதல் விலை கொடுத்து வெளியில் கடைகளில் வாங்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு எழுந்திருக்கிறது. எதற்குமே பதில் தராமல் நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது என்று சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அச்சம்

மூன்று மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துங்கள் என்று உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மே மாதமே உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவு பெற்று விட்டது. காலதாமதம்ஆவதற்கான காரணங்களை ஏற்காத நீதிமன்றம், ஏற்கெனவே உள்ள விதிகளின்படி நடத்துங்கள் என்றுசொல்லிவிட்டது. பெரும்பாலும், நீதிமன்ற ஆணைகளை ஆதித்யநாத் தலைமையிலான அரசு மதிப்பதேயில்லை.அதனால் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த மாட்டார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அடுத்த ஆண்டுசட்டமன்றத் தேர்தல்கள் வரும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பின்னடைவு என்றால் நெருக்கடி உருவாகும்என்ற அச்சமே அவர்கள் நடத்தாமல் இருப்பதற்குக் காரணம் என்று சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்கூறுகின்றன.

கலக்கம்

பன்னாட்டு நிறுவனமாக மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறது.செயற்கை நுண்ணறிவால் பல்வேறு பணியிடங்கள் தேவையில்லாமல் போய்விட்டன என்று கூறி இந்த நடவடிக்கையை எடுக்கிறார்கள். உலகம் முழுவதும் 60 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர். இந்தியாவில் 23 ஆயிரம்ஊழியர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்களின் எத்தனை பேரின் வேலை பாதிக்கப்படப் போகிறது என்று சொல்லவில்லை. ஆனால் இந்தத் திட்டம் இந்தியாவிலும் நடக்கும் என்று கூறிவிட்டார்கள்.அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா ஆகிய நான்கு நாடுகளில் திட்டம் நடைமுறைக்கு வரும். இந்திய ஊழியர்கள்பெரும் கலக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். நிறுவனமோ, ஏதோ ஊழியர்களுக்கு உதவப் போவது போன்று திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்.

உற்சாகம்

அதிகமாக வெளியில் தலை காட்டாமல் இருந்த அமித்ஷா, திடீரென்று சில நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது, பெரும்பாலான நாட்கள் அவர் கலந்து கொள்ளாமல்தான் இருந்தார். இத்தனைக்கும் அவர் தலைநகரில்தான் (தில்லி) இருந்தார். இப்போது திடீரென்று வெளியில் வந்து, 2029இல் நடக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகதான் வெற்றி பெறும் என்று அவர் சத்தமாகப் பேசியதைக் கேட்டு கட்சிக்காரர்களே சிரித்து விட்டார்கள் என்று ஊடகங்கள் எழுதுகின்றன. எப்படி வெற்றி பெற்றீர்கள் என்று கேட்டு நாடுமுழுவதும் நாறடித்து வருகிறார்கள் எதிர்க்கட்சியினர். அதற்குப் பதில் சொல்லாமல் 2029ல் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்வது எதிர்க்கட்சிகளை உற்சாகப்படுத்தும் வகையில் உள்ளதாகக் கட்சிக்காரர்களே சொல்கிறார்கள். வரவா..? என்று கேட்டால் எப்படி வேண்டாம் என்று சொல்வதென சில மாநிலத் தலைமைகள் யோசிக்கின்றனவாம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.