ஸ்கேன் இந்தியா
5 Nov 2026, 9:46 pm

ஸ்கேன் இந்தியா

வலைப்பின்னல்

பாஜக ஆளும் திரிபுராவில் நடந்ததேசிய திறந்தவெளிப் பள்ளித்தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்களைப் பணம் கொடுத்து வாங்கும்அல்லது விற்பவர்கள் என்பதைத் தாண்டி பெரியவலை பின்னப்பட்டிருக்கிறது. பெற்றோர்கள் தரப்பில் பெரும் அதிருப்தி கிளம்பியுள்ளது. வெறும் மூன்று பேரைமட்டும் கைது செய்துவிட்டு, பிரச்சனையை மூடி விடலாம் என்று பார்ப்பது

சரியல்ல என்று அவர்கள் குரல் எழுப்புகிறார்கள். தேர்வு மையங்களைத் தேர்வு செய்வதில் இருந்து,விடைத்தாள்கள் திருத்தம் வரையில் பெரும்அளவிள் மோசடிகள் நடக்கின்றன. வேண்டுமென்றே தொலைவில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக, மூன்றுபள்ளிகளைச் சுற்றி இந்த மோசடிகள் நடக்கின்றன. இந்தப் பள்ளிகளை யார் தேர்வு செய்தார்கள்.. வினாத்தாள்கள், விடைத்தாள்கள் எல்லாம் இந்தப் பள்ளி நிர்வாகிகளுக்கு எப்படிக் கிடைக்கின்றன என்று ஏராளமான கேள்விகள் எழும்பியுள்ளன.

யார் பின்னணி?

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் எம்.பி. ருஹுல்லா, தேசிய மாநாட்டுக் கட்சியிலிருந்தும், தனது எம்.பி. பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததன் பின்னணியில் பாஜக இருப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜகவின் “ஆபரேசன் தாமரை”யின் ஒரு பகுதியே இது என்கிறார்கள். அண்மைக்காலங்களில் பாஜகவுக்கு எதிராக அவர் எதுவுமே பேசவில்லை என்று கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சல்மான் அலிசாகர் கூறியுள்ளார். ருஹுல்லா எழுப்பிய பிரச்சனைகள் கட்சிக்கு பேசி சரி செய்திருக்க வேண்டியவைதான். அதற்காக வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் அவர். மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் குறைகள் பற்றி அதிருப்தி வெளியிட்டும் நேரத்தில்தான் இந்தப் பதவி விலகல் நடந்திருக்கிறது.படுதீவிரமாகப் பாஜக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான சஜத் ஷாஹீனும்கூறியுள்ளார்.

நீளும் விரல்கள்

“இதோ வருகிறேன்” என்று சொல்லிச் சென்ற மணிஷாவைப் பல மணிநேரங்களாகக் காணவில்லை. பதறிப்போன குடும்பத்தினர் காவல்துறையை நாடினர். கழுத்தறுக்கப்பட்டு, அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைக்கப்பட்டு அவரது உடல் கிடைத்தது.ஹரியானா காவல்துறையோ, அவசர அவசரமாக அது தற்கொலை என்றும், விலங்குகளால் அவரது உடல்கடிக்கப்பட்டு விட்டதாகவும் வழக்கை மூடியது. பெற்றோர்கள் நீதிமன்றம் சென்றனர். சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடப்பட்டது. சிபிஐ-யும், காவல்துறை சொன்னதையே சொன்னது. ஆனால், சிபிஐ நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்கொலை செய்து கொண்டார் என்பதையும், விலங்குகள் மணிஷாவின் உடலைக் கடித்துச்சிதைத்துவிட்டன என்பதையும் எய்ம்ஸ் மருத்துவப் பரிசோதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆளும் பாஜகவை நோக்கி எதிர்க்கட்சிகளின் விரல்கள் நீளுகின்றன.

தாலிகள் விற்பனை

1989ஆம் ஆண்டு போலியோ தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதற்காக “பிப்கால்”(BIBCOL) என்ற பொ

துத்துறை நிறுவனம் உத்தரப்பிரதேசம், புலந்த்சகர் நகரில் தொடங்கப்பட்டது. தற்போது அதை மூடு

வதில் ஒன்றிய பாஜகஅரசு தீவிரமாக உள்ளது. தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் கடும் நெருக்கடியில் உள்ளனர். தாலிச் சங்கிலியைக் கூடவிற்க வேண்டிய கட்டாயத்திற்கு சில குடும்பங்கள் சென்றுள்ளதாக, பத்திரிகையாளர் சந்திப்பில்குடும்பத்தினர்தெரிவித்துள்ளனர். தனியாருக்கு சாதகமான அரசின் நிலைப்பாடு, ஊழல் உள்ளிட்டவைதான் இந்தத் தொழிற்சாலை நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. டிசம்பர் 2022இல் உற்பத்தியை நிறுத்தி விட்டார்கள். இடதுசாரிக் கட்சிகளும், சிஐடியு தொழிற்சங்கமும் இந்த நிறுவனத்தைப் பாதுகாக்கக் கோரித் தொடர்ந்து குரல் எழுப்பிவருகின்றன.