ஸ்கேன் இந்தியா
4 Nov 2026, 10:08 pm

ஸ்கேன் இந்தியா

ஏன்?

நாடாளுமன்ற இரு அவைகளின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 அன்று தொடங்கி, ஆகஸ்டு 13 ஆம் தேதி வரையில் நடந்தது. கூட்டத்தொடர் முடிந்தது என்று அறிவிக்கப்படும் வரையில், தள்ளி வைக்கப்பட்டதாகவே கருதப்படும். 83 நாட்கள் கடந்து விட்டன. இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. அப்படி அறிவிக்காவிட்டால் எப்போது வேண்டுமானாலும் ஒருநாள், இரண்டு நாள் கூட்டம் ஒன்றை நடத்திக் கொள்ளலாம். அது மழைக்காலக் கூட்டத்தொடரின் பகுதியாகவே கருதப்படும். ஒருவேளை, நாடாளுமன்ற எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட சில மசோதாக்களைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி அரசு காத்துக் கொண்டிருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. ஏன் இன்னும் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அரசுத்தரப்பில் இதுவரையில் மவுனம்தான் பதிலாக உள்ளது.

எப்படி?

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இந்தியாவின் எந்த ஐஐடியும், ஐஐஎஸ்சியும் தரமான பல்கலைக்கழகங்களுக்கான தரப்பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் ஒன்றாக வரவில்லை. ஆசியப் பட்டியலில் மொத்தம் 325 இந்தியக் கல்வி நிலையங்கள் உள்ளன. அதில் ஐஐடி தில்லி, ஐஐஎஸ்சி பெங்களூரு, ஐஐடி மும்பை, ஐஐடி சென்னை, ஐஐடி கரக்பூர் மற்றும் ஐஐடி கான்பூர் ஆகிய ஆறு கல்வி நிலையங்கள் தர வரிசையில் முதல் 100 இடங்களில் ஒன்றாக இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இவையனைத்துமே கடந்த ஆண்டு பெற்ற இடத்திலிருந்து சரிந்துள்ளன. ஐஐடி சென்னை 70வது இடத்தில் இருந்து 85வது இடத்திற்குச் சென்றுவிட்டது. ஐஐடி தில்லி 59லிருந்து 66க்கு பின்தங்கியுள்ளது. இந்த சரிவு எப்படி நேர்ந்தது என்ற பரிசீலனைகளும் நடக்கின்றன. புதிய கல்வி நிலையங்கள் ஏராளமாக இந்தப் பட்டியலில் இடம் பெற்றதுதான் காரணம் என்கிறார்கள்.

எதற்காக?

ஜார்க்கண்டில் உள்ள ஏகலைவன் பள்ளிகள் காலியாகக் கிடக்கின்றன. தலைநகர் ராஞ்சியில் உள்ள ஏக

லைவன் மாதிரி உறைவிடப் பள்ளியோ தடுமாறுகிறது. போதிய அளவு ஆசிரியர்கள் இதுவரையில் நியமிக்கப்படவில்லை. மாணவர்கள் சேர்க்கைக்காக எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பள்ளி தொடர்பான ஒவ்வொரு வேலைக்கும் நிர்வாக ரீதியான முடிவுகள், அனுமதிகள் பெரும் தாமதமாகின்றன. தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் இல்லை. ஒன்றிய அரசின் திட்டமான இந்தப் பள்ளியை ஓராண்டு முன்பாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதற்கு அடுத்து இந்தப் பள்ளி திறக்கப்படவில்லை. புழுதியடைந்து பாழடைந்த கட்டிடமாகக் காட்சியளிக்கிறது. எதுவுமே இல்லாத இந்தப் பள்ளிக்கூடத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக முதல்வர் நியமிக்கப்பட்டிருக்கிறார். விரைவில் தொடங்கி விடுவோம் என்கிறார் அவர்.

எப்போது?

டிசம்பர் 2020ல் தெலுங்கானாவின் ஐதராபாத் மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தது. அதில் தேர்வு பெற்றவர்கள் பதவிக்காலம் பிப்ரவரி 2026ல் நிறைவு பெற்றது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள்2025ன் நிறைவுப் பகுதியில் நடக்காதபோதே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் ஆளும் காங்கிரஸ்அரசு கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே இருந்த மாநகராட்சியையும், சுற்றியிருந்த 27 நகராட்சிகளையும் ஒருங்கிணைத்து, தற்போது மூன்று மாநகராட்சிகளாகப் பிரித்து விட்டனர். அதன்பிறகாவது தேர்தல் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மூன்றிற்கும் தனித்தனியாக சிறப்பு அதிகாரிகளைப் போட்டு அந்த எதிர்பார்ப்பை மாநில அரசு பொய்யாக்கி விட்டது. தேர்தல் நடந்தால் வெற்றி வாய்ப்பு உறுதியில்லை என்ற நிலையில்தான் காங்கிரஸ் தேர்தல் நடத்த மறுத்து வருகிறது என்று எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி குற்றம் சாட்டியுள்ளது.