ஸ்கேன் இந்தியா
3 Nov 2026, 11:24 pm

ஸ்கேன் இந்தியா

காணவில்லை

பஞ்சாப்பின் முன்னாள் அமைச்சரான நவ்ஜோத் கவுர் சித்து, பரபரப்பாகப் புதிய கட்சியைத் தொடங்குவதாக ஏப்ரல் மாதத்தில் அறிவித்தார். ஒன்றிரண்டு அறிவிப்புகளை வெளியிட்டதோடு நின்று விட்டார். அதன்பிறகு அவரைப் பொது வெளியில் காணமுடியவில்லை. இவர் பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரரும், முன்னாள் எம்.பி.யுமான நவ்ஜோத் சிங் சித்துவின் துணைவியாராவார். அவர் டி.வி. நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். காங்கிரசில் ஏற்பட்டுள்ள தலைமை மாற்றம் அவரை மீண்டும் அக்கட்சியை நோக்கி இழுக்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பர்கத் சிங்கும், சித்துவும் நெருக்கமானவர்கள் என்பதே அதற்குக் காரணமாகும். தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் குடும்பத்தோடு முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலகல்

ஜம்மு-காஷ்மீரின் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்து ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ருஹுல்லா விலகியிருக்கிறார். கட்சியுடன் தொடர்ந்து கருத்து வேறுபாடு கொண்டவராக இருந்தாலும், 2024இல் கட்சியின் மக்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மக்களவையில் காஷ்மீர் பிரச்சனைகளை எடுத்து வைக்கும் முகமாகவும் மாறினார். அரசியல் சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பின்னர், அடுத்த என்பதில் கட்சிக்குள் நடக்கும் விவாதத்தில் கட்சித் தலைமையுடன் ருஹுல்லா முரண்பட்டார். மாநில அந்தஸ்து என்பதே கட்சித்தலைமையின் இலக்காகும். ஆனால் ருஹுல்லாவோ 370ஆவது பிரிவு நீக்கப்பட்டதற்கு முன்பாக என்ன அந்தஸ்தோ அதை மீட்க வேண்டும் என்பதாகும். தனது கருத்திற்கு இனிமேலும்செவிமடுக்கும் நிலையில் தலைமை இல்லை என்று கருதியே வெளியேறியுள்ளார்.

எரிகிறது

மணிப்பூர் மீண்டும் பற்றியெரியத் தொடங்கியுள்ளது. குக்கி-நாகா சமூகங்களுக்கு இடையிலான மோதலைத் தடுக்க எந்தவிதமான முயற்சிகளையும் ஒன்றிய, மாநில பாஜக அரசுகள் எடுக்கவில்லை. இந்தப்பிரச்சனையை அவர்கள் வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையாகவே பார்த்தனர். சொந்த மாநிலத்திலேயேஆயிரக்கணக்கான குடும்பங்கள் பல ஆண்டுகளாக அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். வன்முறைதொடர்கிறது. தற்போது ஒரே நாளில் ஐந்துகுக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இருதரப்பும் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டு மோதியிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் மூவர் இளம் “கிராமத் தொண்டர்கள்” என்று கிராமத்தினர் சொல்கிறார்கள். அரசுத்தரப்பில் அமைதியை ஏற்படுத்த முடியாததால் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, இந்தத்தொண்டர் படையை இருதரப்பிலும் உருவாக்கியுள்ளனர்.

தொடக்கம்

தொடர் போராட்டத்திற்குப் பிறகு,தங்கள் உரிமையை மீட்பதில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அடுத்த கல்வியாண்டுத் தொடக்கத்தில் மாணவர் பேரவை நடத்தப்படும் என்று நிர்வாகம்உறுதியளித்துள்ளது. இந்நிலையில்தான் ஆசிரியர்களும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கான தேர்தல்நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கையும் நீண்டகாலமாக உள்ளது.நீதிமன்ற வழக்கும் போடப்பட்டு, சங்கத் தேர்தலைமுறையாக நடத்த வேண்டும் என்று 2025ஆம் ஆண்டில் தீர்ப்பும் பெறப்பட்டது. ஆனால் அந்தத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த நிர்வாகம் முன்வரவில்லை. வெறும் ஒரு நிர்வாக ஆணையைப் போட்டுத் தனது முடிவைத் துணை வேந்தர் நிறைவேற்றினார். அதை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. மாணவர் போராட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் தொடங்குகிறது.