தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

29 Oct 2026, 9:49 pm
ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

தேச விரோதி

மாணவர் போராட்டங்களை அரசு படுமோசமாகக் கையாளுகிறது என்று பிரபல நடிகர் நசிருதீன் ஷாவிமர்சித்துள்ளார். அதோடு, மாற்றுக் கருத்து சொல்லும் எங்களைப் போன்றவர்களை தேச விரோதி,பிரிவினைவாதி, நகர்ப்புற நக்சல் என்றெல்லாம் வார்த்தைகளைப் பயன்படுத்தி அழைக்கிறார்கள். ஜாமியாமிலியா பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்தக் கோரி 18ஆவது நாளாக போராட்டத்தில்இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக நசிருதீன் ஷா குரல் எழுப்பியிருக்கிறார். இந்த நாட்டில் பிரிவினையைத்தூண்டுபவர்கள் இருக்கிறார்கள் என்றால், அது இந்த அரசாங்கம்தான் என்று ஒன்றிய அரசை அவர்சாடியிருக்கிறார். முதலில் ஜவகர்லால் பல்கலைக்கழகம்.. பின்னர் சத்யஜித்ரே திரைப்படப் பயிற்சி மையம்..தற்போது ஜாமியா மிலியா.. இப்படி ஒவ்வொன்றாக சீர்குலைத்து வருகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

படுமோசம்

2016 முதல் 2025 வரையில் இந்தியாவில் வீசிய வெப்பக்காற்றில் 50 விழுக்காடு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டது என்று லேன்செட் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனால் தொற்று நோய் ஆபத்துகள் மற்றும்காற்று மாசு ஆகியவை ஏற்பட்டு சுகாதார, வாழ்வாதார மற்றும் உற்பத்தியில் பிரச்சனைகளை நாடு எதிர்நோக்கியுள்ளது. வெப்பக்காற்று வீசுகையில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சாதாரண மக்களாகவே உள்ளனர். வெப்பப் பாதிப்பைத் தடுக்க அரசுகள் உரிய முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். காலநிலை மாற்றம், அதன் பாதிப்புகள், அவற்றை எதிர்கொள்ள வேண்டிய உத்திகள் என்று எதைப் பற்றியுமே தீவிரமாக ஆராய்ந்து செயல்படாமல் ஒன்றிய அரசு அமைதியாக இருக்கிறது. நிலைமை இன்னும் மோசமாகவிருக்கிறது என்று ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

உடைப்பு வேலை

“வார்த்தை தவறிவிட்டாய்” என்று ஒன்றிய அரசைப் பார்த்து லடாக், லே மற்றும் கார்கில் பகுதிகளைச் சேர்ந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. மே 22, 2026 அன்று நடந்த கூட்டத்தில் சொல்லப்பட்ட விஷயங்களில் தங்கள் அமைப்புகள் திருப்தி அடைந்ததாகக் கூறியுள்ளவர்கள், அப்போது சொன்னவற்றில் இருந்து ஒன்றிய அரசு பின்வாங்கிவிட்டது என்கிறார்கள். அப்படிச் சொல்வதோடு நிற்கவில்லை. மே 22 ஆம் தேதி என்ன சொன்னார்கள் என்பதற்கு சான்றாக அக்கூட்டத்தின் குறிப்புகளைப் பொதுவெளியில் வைத்துள்ளனர். மறுபுறத்தில், துப்ஸ்டான் சேவாங் என்பவரின் தலைமையில் புதிய அமைப்பை உருவாக்கி, பேச்சுவார்த்தை நடத்திய அமைப்புகளைப் புறக்கணிக்கும் முயற்சியில் பாஜக அரசு இறங்கியிருக்கிறது. இந்த அமைப்புகளில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டவர் என்பதோடு, பாஜக சார்பில் எம்.பி.யாகவும்இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விதிமுறை மீறல்

பணியிடங்களில் விதிமுறைப் பின்பற்றல் குறைபாடுகள் எந்த வகையில் நடக்கின்றன என்று டீம்லீஸ் ஆய்வு நடத்தியிருக்கிறது. தொழிற்சாலைகள், பணிமனைகள், பெருநிறுவன அலுவலகங்கள், கிடங்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துள்ளனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பணியிடங்களில் 80 விழுக்காடு இடங்கள்விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பதில் தொழிலாளர் நலன்கள், சுற்றுச்சூழல், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றில்தான் அதிகஅளவில் நடந்துள்ளதாகத் தெரியவருகிறது. இத்தனைக்கும் பல குறைபாடுகள் நடவடிக்கைக்கு உள்ளானால், சில நிர்வாகிகளுக்கு சிறைத் தண்டனையும் கிடைக்கலாம். ஆனால்,சோதனைகளும் முறையாக நடப்பதில்லை என்பதும் பிரச்சனையாக உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.