தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

28 Oct 2026, 9:00 pm
ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

இடங்கள் போச்சு..

உட்கட்சி மோதல், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் பாஜகஎதிர்ப்பில் மெத்தனம் ஆகியவற்றால் கர்நாடக மேலவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. நான்குஇடங்களுக்கு நடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. முன்னாள் முதல்வர் சித்தராமய்யாவைச் சிக்க வைக்க “பொறி” வைப்பதில் ஒருகோஷ்டி கவனம் செலுத்தியது. சித்தராமய்யா கோஷ்டியினரோ, இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்றால்தான், தங்கள் பக்கம் மேலிடம் கண்களைத் திருப்பும் என்று கணக்குபோட்டிருந்தார்கள்.மொத்தத்தில் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்தும், அனைத்து இடங்களிலுமே தோற்றுள்ளது. தங்கள் கூட்டணி வெற்றிபெறாது என்று நினைத்து, பெங்களூரு ஆசிரியர் தொகுதியை மதச்சார்பற்ற ஜனதா தளத்திடம் பாஜக தள்ளி விட்டது. அந்தத்தொகுதியிலும் காங்கிரஸ் தோற்றுவிட்டது.

நிம்மதி போச்சு..

ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை ஒடுக்க, “வன்முறை” என்று புதிய குற்றச்சாட்டை நிர்வாகம் முன்வைத்துள்ளது. அமைதியான முறையில் தொடர்ந்து மாணவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால், அக்.27 இரவில் பல்கலைக்கழகத்தின் வாயிற்கதவுகள் ஒன்று சிதைக்கப்பட்டதாகவும், மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவ்வளவு காவல்துறையினர் சுற்றி நிற்கும் நிலையில், அந்த வன்முறை எப்படி நடந்தது என்று மாணவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதோடு, வன்முறை குறித்துக் காவல்துறையில் ஏன் புகார் அளிக்கவில்லை என்றும் கேட்கிறார்கள். மாணவர்கள் போராட்டத்தைக் குலைப்பதற்கான உத்தி இது என்று குற்றம் சாட்டியுள்ளனர். பல்கலைக்கழக சுவர்களில் “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று எழுதப்பட்டுள்ளது, நிர்வாகம் மற்றும் பாஜகவினரின் நிம்மதியைக் குலைத்துள்ளது.

பாதுகாப்பு போச்சு..

மேற்கு வங்கத்தில் ஏற்கனவே சிதைந்து போயிருந்த சட்ட ஒழுங்கு, பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பெருமளவில் அதிகரித்து விட்டது. எதிர்க்கட்சிகளின் அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் ஒருபுறம். சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் மேல்கடுமையான தாக்குதல்கள் மறுபுறத்தில் அரங்கேறுகின்றன. 13 வயது சிறுமிக்கு போதைப் பொருள்கொடுத்து, கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருட்கள் தாராளமாகப் புழங்குவதையும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் தொடர்கதையாக மாறியுள்ளன. இந்த சம்பவங்களில் குற்றவாளிகள், வீடியோக்களை எடுத்து பாதிக்கப்பட்டவரை, அவரின் குடும்பங்களை மிரட்டுவதும் வழக்கமாகியுள்ளது. அரசியல் ஆதரவு இல்லாமல் இவ்வளவு குற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் குழந்தைகள் நலஆர்வலர்கள்.

பணம் போச்சு..

தேசிய தூய காற்றுத் திட்டம் தொடங்கி ஏழு ஆண்டுகளாகி விட்டது. 2019 ஆம் ஆண்டில் இதைத் தொடங்குகையில், குறிப்பாக 131 நகரங்களைக் குறிவைத்து, 2017-18ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, அப்போதிருந்ததை விட 20 முதல் 30 விழுக்காடு தூய்மையைக் கொண்டு வருவோம் என்றார்கள். 131 நகரங்களில், இன்னும் நிலைமை மோசமாக இருக்கும் நகரங்களின் எண்ணிக்கை 117 ஆக உள்ளது. இத்தனைக்கும் இதுவரையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 12 ஆயிரத்து 87 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது. 43 நகரங்களில் 2017-18 ஆம் ஆண்டில் இருந்ததை விட நிலைமை மோசமாயிருக்கிறது என்று எரிசக்தி மற்றும் தூயக் காற்றுக்கான ஆய்வுமையத்தின் ஆய்வாளர் மனோஜ் குமார் மேற்கொண்ட ஆய்வு விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்திற்கு உட்பட்ட நகரங்களைத் தாண்டி, பல இடங்களில் நிலைமை மோசமாகியிருக்கிறது என்றும் ஆய்வு கூறுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.