தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

37 minutes before
ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

அனுமதி

கறிக்கடைக்காரர்களை குஜராத்தின் மூன்று என்ஜின் நிர்வாகம் படாதபாடு படுத்துகிறது. கோவிலைச் சுற்றி அசைவ உணவு கூடாது என்றார்கள். நீதிமன்றம் அந்த ஆணையை ரத்து செய்தது. தற்போது பதான் நகர்மன்ற நிர்வாகம்,கறிக் கடைக்காரர்களுக்கு தலையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறுகிறது. நாட்டின் வரலாற்றில் இதுவரை எந்த நிர்வாகம் கேட்காத பல கேள்விகளைக் கேட்டு, அவற்றிற்கான விடைகள், ஏற்பாடுகள் இருந்தால்தான் சான்றிதழ் தர முடியும் என்கிறார்கள். பத்து கடைக்காரர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். விசாரித்த நீதிபதிகள், இப்படியெல் லாம் நடைமுறை சாத்தியமில்லாத அம்சங்களை கோராதீர்கள். இதெல்லாம் உங்கள் அதிகார வரம்புக்குள் வராது. கடைக் காரர்களின் விண்ணப்பங்களை மறுபடியும் பரிசீலித்து அனுமதி வழங்கப் பாருங்கள் என்று சொல்லிவிட்டது. கடைக்காரர்களோ, தேவைப்பட்டால் மீண்டும் வருகிறோம் என்று நீதிபதியிடம் சொன்னார்கள்.

வழியில்லை

கிராக்கி இருப்பது போலக் காட்டிக் கொண் டாலும், பாஜகவும், சிரோமணி அகாலி தளமும் சேர்ந்து போட்டியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஆளுங்கட்சியாகவோ, பிரதான எதிர்க்கட்சியாகவோ இருந்து வந்த அகாலி தளம், தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. போட்டி, காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக் கட்சிக்கும் இடையில்தான் இருக்கிறது. இதனால், பாஜகவோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம் என்று நினைக்கிறது. ஆனால் உள்ளூர் பாஜககாரர்களிடம் பேசுவதற்கு அகாலிதளத் தலைவர்கள் தயாராக இல்லை. பாஜகவைப் பொறுத்தவரை, ‘இழப்பதற்கு எதுவுமில்லை’ என்று உள்ளூர் பாஜகவினர் பாடுகிறார்கள். அதனால், எந்த முடிவுக்கும் அவர்கள் தயார்தான். மேலிடமே சொல் லட்டும் என்று அவர்களுக்கும் காத்திருக்கிறார் கள். திடீரென்று எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடுங்கள் என்று சொல்லிவிட்டால், வேட்பாளர் களுக்கு எங்கே போவது என்ற முனகலும் கேட்கிறது.

தாமதம்

மாநில அளவில் சிறந்த ஆசிரியர் களுக்கான விருது ஒவ்வொரு ஆண் டும் செப்டம்பர் 5ஆம் தேதியன்று மகாராஷ்டிர மாநில அரசால் அறிவிக்கப்படும். தற்போது இரண்டு மாதங்கள் கழிந்தும் அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆசிரியர்கள் தரப்பில் பெரும் அதிருப்தி காணப்படுகிறது. சாவித்திரிபாய் பூலே பெயரிலான இந்த விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும். பழைய ஆட்சியாளர்களும் தாம

தப்படுத்தியுள்ளனர். ஆனால் அறிவிப்பு வந்து, விழா நடப்பதற்கு மட்டுமே தாமதம் இருந்தது. இப்போது கடந்த மூன்று ஆண்டுகளாகவே விருது அறிவிப்பதில் தாமதம் உள்ளது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். இந்த அளவுக்கு ஒருபோதும் நாட்கள் கடத்தப்பட்டதில்லை என்று மாநிலப் பள்ளி முதல்வர்களின் சங்க நிர்வாகி மகேந்திர கன்புலே சுட்டிக்காட்டுகிறார். பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசோ நகராமல் இருக்கிறது.

படுகொலை

நாடு முழுவதும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கும் உள்ளாட்சித் தேர் தல்களில் ஜனநாயகப் படுகொலை அரங்கேறியுள்ளது. திரிபுராவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. பல இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக பாஜக அறிவித்துக் கொண்டிருக்கிறது. மனுதாக்கல் செய்வதற்கு ஏராளமான முட்டுக்கட்டைப் போட்டே இந்த வெற்றி கிடைத்தது. அதோடு, மனுக்கள் நிராகரிப்பும் நடந்தேறுகிறது. நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் வேட்புமனுக்களின் எண்ணிக்கையில் சிபிஎம் முதலிடத்தில் உள்ளது. 49 நிராகரிப்புகள் என்று உள் ளாட்சி ஜனநாயக நடைமுறையை கேலிக் கூத்தாக்கி விட்டனர். 12வார்டுகளில் காங்கிரசும் பாதிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் மொத்தம் அகர்தலா மாநகராட்சி மற்றும் 20 நகர்மன்ற அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறவுள் ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.