தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

13 Nov 2026, 10:35 pm
ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

இழுபறி

பதவி ஆசையால் பாஜக பக்கம் தாவிய அஜித் பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் தலைவர்கள் எதிர்காலம் கருதி சரத்பவார் பக்கம் திரும்புகிறார்கள். அஜித் பவாரின் மரணத்திற்குப் பிறகு, அவரது துணைவியார் சுனேத்ரா பவார் கட்சிக்குப் பொறுப்பேற்றார். அவரின் மற்றும் அவரது புதல்வர்களின் அணுகுமுறையால் அடுத்த கட்டத் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். பிரபுல் படேல் உள்ளிட்ட தலைவர்கள் சரத்பவாரைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். இணைப்பு பற்றிய எதிர்ப்பை சுனேத்ரா தொடர்ந்து எழுப்பி வருகிறார்.பாஜகவோ, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்தால் ஒற்றுமை முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும். சுனேத்ராவைவெளியேற்றவும் தயங்காது. ஆனால், சரத் பவாரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறார்கள். எங்களுக்கு இதில்தொடர்பில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் கூறினாலும், அமித் ஷாவை தேசியவாத காங்கிரஸ்தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள்.

புல்டோசர்

புல்டோசர், உத்தரப்பிரதேச மாநிலத்தின் சின்னம் என்று அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் கூறியுள்ளார். புல்டோசர்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகள் உத்தரப்பிரதேசத்தில் அமைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். அவரது இந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சட்டத்தை மீறிய புல்டோசர் நடவடிக்கைகள் பல முறை நீதிமன்றத்தின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது. புல்டோசர் என்பது எந்திரம். அதற்கு எந்தவிதமான உணர்வுகளும் இருக்காது. அதைப் போலவே ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதையே முதலமைச்சரின் இந்தப் பேச்சு காட்டுவதாக சமாஜ்வாதிக் கட்சி கண்டித்திருக்கிறது. நீதிமன்ற அவமதிப்பாகவும் இதைக்கருத வேண்டும் என்றும், சட்ட விரோதமான புல்டோசர் நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

சடங்கு

மேலதிகாரிகளுக்கும், அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் காவலர்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பு படுமோசமான நிலையில் இருந்திருக்கிறது என்பது தில்லி காவல்துறையில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இரண்டு பேரை வேறு இடத்திற்கு மாற்றிய விவகாரத்தில் கடந்த மாதம் சில அதிகாரிகளும், காவலர்களும் போராட்டத்தில் இறங்கினர். அந்தப்பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கும்போதே, சரி செய்திருக்கலாம் என்ற கருத்து வந்தபோதுதான் எதையும் மேலதிகாரிகள் கேட்டுக் கொள்வதேயில்லை என்பதும் தெரியவந்தது. தற்போது காவலர்களின் மனநிலை பற்றி அறிவதற்காக அவர்களோடு மதிய உணவு உண்ணும்நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது ஒருநாள்சடங்காக இருந்துவிடக்கூடாது என்று அந்த நிகழ்விலேயே காவலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

நெருக்கடி

‘பிறந்ததில் இருந்து பன்றிகளோடு உறங்கி, பன்றிகளைத் தின்று வாழ்பவர்கள்’ என்ற பழங்குடி மக்களைப் பற்றிய பாஜக எம்எல்ஏ டோபாசல் உசேனின் பேச்சு கட்சிக்குப் பெரும் நெருக்கடியைத் தந்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறுகுறிப்பிட்டார். ‘அவர் கருத்துக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை’ என்று பாஜக மாநிலத்தலைவர் ஒதுங்குகிறார். கூட்டாளியும், பழங்குடிகளின் கட்சியுமான திப்ரா மோதாவும் ‘இப்படியெல்லாம் பேசுவதுசரியல்ல’ என்று சொல்லி நழுவப் பார்க்கிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பழங்குடி வாலிபர்அமைப்பு, காவல்துறையில் புகார் அளித்துள்ளது. வழக்குப் பதிவு செய்து முறையான நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தினர். சிபிஎம் மற்றும் வாலிபர்சங்கத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், பொது வெளியில் மன்னிப்பு கோரியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.