தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

18 Jan 2026, 4:50 pm
                ஸ்கேன் இந்தியா
<p><strong>ஸ்கேன் இந்தியா</strong></p> <p>வெறுப்பு இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை என்று &nbsp;எழுதப்பட்ட பலகைகள் பாஜக ஆட்சியில் உள்ள &nbsp;உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் நகரின் படித்துறை களில் மாட்டப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம் என்று &nbsp;கேட்டால், அரபு ஷேக்குகள் இருவர் இறங்கிக் குளித்த தோடு, அதை வீடியோ எடுத்துப் போட்டார்களாம். அது &nbsp;பெரிய அளவில் வலம் வந்தது. அதனால் இனிமேல் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டார்கள். விசாரித்ததில், வீடியோ எடுத்துப் போட்டவர்கள் அரபு ஷேக்குகள் இல்லை என்று தெரிய &nbsp;வந்துள்ளது. யூ டியூப்பில் போடுவதற்காக அந்த உடை யை அணிந்து கொண்டு இரண்டு இந்து &nbsp;இளைஞர்கள் &nbsp;தான் படம் பிடித்துள்ளார்கள். இது வேண்டுமென்றே வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்துவதற்காகத் தயாரிக்கப் &nbsp;பட்டிருக்கிறது என்று அப்பகுதி மக்கள் சொல்கி றார்கள். &nbsp;பாதுகாப்பு அதிகார எந்திரத்தைக் கொண்டு தகிடுதத்தங்கள் செய்தும், பெரிய அளவில் வெற்றி பெற முடிய வில்லை. கூட்டணியாகவே பெரும்பான்மை பலத்திற்கு &nbsp;வெறும் நான்கு இடங்கள்தான் அதிகம் என்பதில் பாஜக &nbsp;பெரும் அதிர்ச்சியில் உள்ளது. முடிவுகள் வந்த இரண்டு &nbsp;நாட்களிலேயே அடுத்த அதிர்ச்சியை சிவசேனா தந்துள் &nbsp;ளது. மேயர் பதவி பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று &nbsp;ஏக்நாத் ஷிண்டே கோரியுள்ளார். அதோடு, தனது கட்சி யின் 29 கவுன்சிலர்களையும் பாதுகாப்பாக ஒரு இடத்தில் &nbsp;கொண்டு போய் வைத்துள்ளார். 65 கவுன்சிலர்களைப் பெற்று, உண்மையான சிவசேனா தங்கள் கட்சிதான் என்று உத்தவ் தாக்கரே நிரூபித்து விட்டதாக, ஏக்நாத் &nbsp;ஷிண்டே ஆதரவு கவுன்சிலர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் என்பதுதான் இதற்குக் காரணமாகும். அணி &nbsp;மாறி விடுவார்களோ என்ற அச்சம். அணி மாறினால் தனது பேரம் பேசும் பலம் போய் விடுமோ என்பதால் கவுன்சிலர்களை அடைத்து வைத்துள்ளார்கள். உடைப்பு ராணி அகில்யாபாய் ஹோல்கர் சிலை தகர்க்கப்பட்ட தாக வரும் செய்திகள் குறித்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன. வாரணாசியில் 84 மயானங்கள் உள்ளன. &nbsp;அதில் மணிகர்னிகா மயானமும் ஒன்றாகும். ஒருபோதும் &nbsp;நெருப்பு அணையாமல் ஏதாவது ஒரு பிணம் எரிந்து &nbsp;கொண்டே இருக்கும் என்று சொல்லப்படும் அந்த மயா னத்தை அழகுபடுத்தப் போவதாக ஒரு தனியார் நிறு வனத்தின் கையில் தரப்பட்டுள்ளது. அதன் பணி &nbsp;தொடங்கியுள்ள நிலையில், வாரணாசி கோவிலை மறு அமைப்பு செய்ய நிதியுதவி செய்த ராணி அகில்யாபாய் ஹோல்கர் சிலை தகர்க்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. &ldquo;அப்படியெல்லாம் இல்லை&rdquo; என்று முதலமைச்சர் ஆதித்யநாத்தும், மாவட்ட நிர்வாகமும் சொன்னாலும், அந்த சிலையைக் காட்டுங்கள் என்ப தற்கு இதுவரையில் பதில் இல்லை. நடிப்பு திரிபுராவில் பாஜகவும், திப்ரா மோதாவும் கூட்டணி &nbsp;ஆட்சி அமைத்துள்ளன. திப்ரா மோதா தலைவரின் &nbsp;சகோதரி தாமரை சின்னத்தில் நின்று எம்.பி.யும் ஆனார். &nbsp;இப்போது கூட்டணிக்கட்சியையே பாஜக உடைத்துக் கொண்டிருக்கிறது. திப்ரா மோதா கட்சியைத் தொடங்கி யவர்களில் ஒருவரான பரிதோஷ் தேப்பர்மாவை இழுத் &nbsp;துள்ளார்கள். அவரை இணைக்கும் நிகழ்வில், மேலும் &nbsp;பல திப்ரா மோதா சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் &nbsp;தாவத் தயாராக இருக்கிறார்கள் என்று அமைச்சர் பிகாஷ் &nbsp;தேப்பர்மா கூறியிருக்கிறார். ஆதிவாசி மாவட்டக் கவுன்சி லில் ஐந்து ஆண்டுகள் பொறுப்பில் இருந்துள்ள திப்ரா &nbsp;மோதா, எந்த வேலையும் செய்யவில்லை என்று கூட்ட ணிக்கட்சி மீது பாய்ந்துள்ளார். விரைவில் கவுன்சி லுக்கு தேர்தல் வரவுள்ளதால், பாஜக நடிக்கிறது என்று &nbsp;திப்ரா மோதா எதிர்வினை ஆற்றியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.