அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும்!
14 Jul 2026, 9:51 pm
<p><strong>அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும்!</strong></p><p>உச்ச நீதிமன்றம் அறிவிப்பு சென்னை, ஜூலை 14 - அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலு மணி உள்ளாட்சித்துறை அமைச்ச ராக இருந்தபோது முறைகேடாக நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவி யாளர்கள் பணி நீக்கம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 54 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு கோவை மாநகராட்சிக்கு 54 இளநிலை உதவி யாளர் பணியிடங்களை ஒரே நாளில் விளம்பரப்படுத்தி அந்த நாளிலேயே நேர்காணல் வைத்து ஆட்கள் சேர்க்கப் பட்டதாகவும், இதில் கடுமை யான விதிமுறைகள் மீறப்பட்டிருப்ப தாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக 11 பேர் தொடர்ந்த வழக்கில், 54 பணியிடங்கள் நிரப்பப் பட்டதில் சட்ட விரோதமும், விதிமுறை கள் மீறலும் இருப்பதைக் கண்டறிந்த தாகக் கூறி, அவர்கள் அனைவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்த பணியிடங்கள் பணம் பெற்றுக் கொண்டு நிரப்பப்பட்டதாக புகார்கள் இருக்கும் நிலையில், இதன் மூலம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.</p>
