தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிரான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை?

23 May 2026, 9:41 pm
மோடி அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிரான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை?

மோடி அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிரான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபி எஸ்இ) 2026-27 கல்வி யாண்டு முதல் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி ஒன்றைக் கற்பதைக் கட்டாயமாக்கி, மும்மொழிக் கொள்கை அறிவிப்பை வெளியிட்டது.

இதனை எதிர்த்து தில்லி, குரு கிராம், நொய்டா, சென்னை ஆகிய நகரங்களைச் சேர்ந்த பெற்றோர், ஆசி ரியர்கள் உள்ளிட்ட 19 பேர் கொண்ட குழுவினர் ஒன்றிய அரசு, சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி ஆகிய வற்றுக்கு எதிராக அரசியல் சாசனப் பிரிவு 32-இன் கீழ் ரிட் மனுவைத் தாக் கல் செய்தனர்.

இந்த மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக இதனைப் பட்டியலி டக் கோரி வாய்மொழி வேண்டுகோள் விடுத்தார். அதில்,”இது புதிய சிபி எஸ்இ கொள்கையை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள மாணவர் கள், ஆசிரியர்கள், பெற்றோர் கள் தொடர்ந்துள்ள மனுவாகும்.

இதன்படி, 9ஆம் வகுப்பில் மேலும் 2 மொழிகள் கட்டாய மாக்கப்பட்டுள்ளன. 9ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் எவ்வாறு திடீரென ஒரு புதிய மொழியைத் தேர்ந்தெடுத்து, எப்படி 10ஆம் வகுப்பில் அதற்கான தேர்வை எழுத முடியும்? இது பெரும் குழப்பத்தை உருவாக்கும். எனவே இந்த மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என ரோத்கி வாதிட்டார்.

தொடர்ந்து இந்த பொதுநல மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அடுத்த வாரம் விசாரணைக்குப் பட்டியலிட ஒப்புதல் அளித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.