தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்!
29 Sept 2026, 9:24 pm

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல்!

புதுதில்லிவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 14முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்ட முறையில்முடிவெடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராகஅரசியலமைப்பின் 32ஆவது பிரிவின் கீழ் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் குமார் சிங் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பாகத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் மோகனா ஆகியோர்அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்தது. தொடர்ந்து, ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கை விசாரிக்கத் தலைமை நீதிபதிஒப்புதல் வழங்கினார். மேலும், வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டார்.