தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாடப்புத்தகக் கேலிச்சித்திரங்களை ஆய்வு செய்யக் குழு உச்சநீதிமன்ற உத்தரவைத் திரும்பபெற பொதுபள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை

24 May 2026, 9:14 pm
பாடப்புத்தகக் கேலிச்சித்திரங்களை ஆய்வு செய்யக் குழு  உச்சநீதிமன்ற உத்தரவைத் திரும்பபெற  பொதுபள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை

பாடப்புத்தகக் கேலிச்சித்திரங்களை ஆய்வு செய்யக் குழு உச்சநீதிமன்ற உத்தரவைத் திரும்பபெற பொதுபள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை

சென்னை, மே 24- “கல்வி சார்ந்த பணிகளைக் கல்வியா ளர்களிடமே விட்டுவிடுவதுதான் சிறந்தது” என்று ‘பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை - தமிழ்நாடு’ அமைப்பு இந்திய உச்ச நீதிமன்றத்திற்குப் பகிரங்க வேண்டு கோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பி. பி. பிரின்ஸ் கஜேந்திரபாபு விடுத்துள்ள அறிக்கை: கடந்த பிப்ரவரி 2026-இல் சட்டப் படிப்பு பாடப்புத்தகம் குறித்தும், தற்போது மே 22,அன்று பாடப்புத்தகங்களில் உள்ள கேலிச்சித்திரங்களை ஆய்வு செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலை மையில் குழு அமைத்தும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, கல்வியியல் பணிகளில் தேவையற்ற தலையீடாகும். இந்தியச் சொலிசிட்டர் ஜெனரல் இப்பிரச்சனையை நேரடியாக நீதி மன்றத்திற்குக் கொண்டு செல்லாமல் கல்வி அமைச்சகத்தின் மூலம் கல்வி யாளர்களிடமே கொண்டு சென்றிருக்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளை மாணவர்கள் புரிந்துகொள்ள ‘அரசியல் நையாண்டி’ மற்றும் கேலிச்சித்திரங்கள் உதவுகின்றன. விமர்சனங்களை லேசான மனதோடு எதிர்கொள்ளவும், வகுப்பறைகளில் ஆரோக்கியமான விவாதங்களை உரு வாக்கவும் இவை வழிவகுக்கின்றன. இவற்றை நீக்குவது மாணவர்களின் கலை மற்றும் இலக்கிய வடிவங்களை அனுப விக்கும் உரிமையைப் பறிப்பதாகும். குழந்தைகளின் வயது மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டே பாடத்திட்டங்கள் வடி வமைக்கப்படுகின்றன. எனவே, கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறை களை நீதிமன்றங்கள் தலையிடாமல் கல்வி யாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும். ஆகவே, பாடப்புத்தகக் கேலிச் சித்திரங்களை ஆய்வு செய்ய உத்தர விட்ட ஆணையை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் எனப் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை கேட்டுக்கொள்கிறது என அவர் கூறி யுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.