முந்தய பக்கம்

பட்டியல், பழங்குடியினர் பொருளாதார விடுதலை மாநாடு

10 Oct 2026, 11:52 pm
பட்டியல், பழங்குடியினர் பொருளாதார விடுதலை மாநாடு
<p><strong>பட்டியல், பழங்குடியினர் பொருளாதார விடுதலை மாநாடு</strong></p><p>தருமபுரி, அக்.10-தருமபுரியில் நடைபெற்ற பட்டியல், பழங்குடியினர் பொருளாதார விடுதலை மாநாட்டில் பலர் கலந்து கொண்டனர்.</p><p>ஆதிதிராவிடர் வர்த்தக மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு சார்பில், பட்டியல் மற்றும் பழங்குடியினர் பொருளாதார விடுதலை மாநாடு, தருமபுரி டிஎன்சி விஜய் ஹாலில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பேரமைப்பின் தலைவர் தமிழழகன் நல்லய்யன் தலைமை வகித்தார். என்எஸ்ஐசி மண்டல பொது மேலாளர் ஸ்ரீவட்சன், அறிவியல் ஆராய்ச்சி அலுவலர் ராஜா, இந்திய இரும்பு உருக்கு ஆணைய பொது மேலாளர் மனோஜ், தலைவர் தமிழ்செல்வம், ஒருங்கிணைaப்பாளர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்று பேசினர். இம்மாநாட்டில், பட்டியல் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோர், வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள், தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோராக விரும்புவோர் ஆகியோர் தொழில்துறை, நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து, நிலையான தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்துஎடுத்துரைக்கப்பட்டது. மேலும், தொழில்முனைவு மற்றும் நிறுவன வளர்ச்சிசந்தை அணுகல், மற்றும் வர்த்தக வாய்ப்புகள், அரசு திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவுநிதி, தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சி ஸ்டார்ட்அப்கள், புதுமை மற்றும் புதிய தலைமுறை தொழில்முனைவுதொழில் தொடர்புகள் மற்றும் கூட்டாண்மை அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி குறித்து பேசப்பட்டது. இம்மாநாட்டில், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram