எஸ்.சி., எஸ்.டி. சாதிச் சான்று: சமூக நலத்துறை முக்கிய உத்தரவு
24 Jul 2026, 9:13 pm
<p><strong>எஸ்.சி., எஸ்.டி. சாதிச் சான்று: சமூக நலத்துறை முக்கிய உத்தரவு</strong></p><p>சென்னை, ஜூலை 24 - ஆதிதிராவிடர்களுக்கு 2 நாளிலும், பழங்குடியினருக்கு ஒரு வாரத்திலும் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், எஸ்.சி./எஸ்.டி. மக்களுக்கு காலம் தாழ்த்தா மல் சான்று வழங்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நீதித்துறை எச்ச ரிக்கை விடுத்துள்ள நிலையில், இனச்சான்று வழங்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்குவதில் தாமதம் இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இதன் அடிப் படையில் சமூக நீதித் துறை சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆதிதிராவிடர்களுக்கு 2 நாளி லும் பழங்குடியினருக்கு ஒரு வாரத்திலும் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்; எந்த வகையிலும் காலம் தாழ்த்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக நலத்துறை அமைச்சர் பல்வேறு இடங்களில் ஆய்வுக்குச் செல்லும்போது, சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் தாம தம் குறித்து பலரும் புகார் அளித்ததை அடுத்து இப்புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. சான்றிதழ் வழங்குவதில் ஏதே னும் சந்தேகம் இருந்தால் 15 நாட்களுக்குள் அது தொடர்பான மனுக்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், சான்று அளிக்க இயலாத நிலையிலும் அது குறித்து மனுதாரருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் சான்றிதழ் கேட்டு அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும், காலம் தாழ்த்தினால் அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக் கும் சமூக நலத்துறை சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. </p>
