தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பண மோசடி வழக்கில் சொத்து முடக்கம் – அமலாக்கத்துறைக்கு உச்சநீதிம்னறம் கட்டுப்பாடு

7 hours before
பண மோசடி வழக்கில் சொத்து முடக்கம் – அமலாக்கத்துறைக்கு உச்சநீதிம்னறம் கட்டுப்பாடு
<p>பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சொத்துகளை முடக்குவது தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்கும் ஆணையத்தின் அமர்வில், நீதித்துறை உறுப்பினர் ஒருவர் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 6-இன் கீழ் அமைக்கப்பட்ட &#39;தீர்ப்பாய அதிகாரம்&#39; தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பை, தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு செப்டம்பர் மாதம் ஒத்திவைத்திருந்தது. இதில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சொத்துகளை முடக்குவது தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்கும் ஆணையத்தின் அமர்வில், நீதித்துறை உறுப்பினர் ஒருவர் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>அதேசமயம், தீர்ப்பளிக்கும் ஆணையத்தின் தலைவராக நீதித்துறை உறுப்பினர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><p>ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அல்லது நிலுவையில் உள்ள வழக்குகளை இந்தத் தீர்ப்பு பாதிக்காது என்றும், இனிவரும் காலத்துக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.