தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நொய்டா வன்முறையில் கைதான மாணவியின் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

8 May 2026, 9:36 pm
நொய்டா வன்முறையில் கைதான மாணவியின்  ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
<p><strong>நொய்டா வன்முறையில் கைதான மாணவியின் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு</strong></p><p>புதுதில்லி பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநி லத்தின் நொய்டா வில் ஏப்ரல் 13ஆம் தேதி பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது நீண்ட கால கோரிக்கையான ஊதிய உயர்வை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் அடாவடியால் இந்த போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. பெண்கள், சிறுவர் என பலர் வன்முறை யைத் தூண்டியதாக கைது செய்யப் பட்டனர். இதில் ஆக்ரிதி சவுத்ரி என்ற தில்லி மாணவியும் கைது செய்யப் பட்டார். கடந்த 20 நாட்களுக்கு மேலாக மாணவி சிறையில் உள்ளார். இந்நிலையில், ஆக்ரிதி சவுத்ரி ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளி யன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதத்திற்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு, “நீங்கள் ஏன் உயர்நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடாது? ஒவ்வொருவரும் அரசியலமைப்பின் 32ஆவது பிரிவின் கீழ் மனு தாக்கல் செய்து நேரடியாக இங்கே வருகிறார்கள். உச்சநீதிமன்றத்தில் தற்போது 93,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேரத்தை வீணடிக்க வேண்டாம். அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்கி றோம்” என உத்தரவிட்டது. உ.பி., அரசுக்கு நோட்டீஸ் இதே வன்முறை தொடர்பாக கைதான கேசவ் ஆனந்த் என்பவர், உத்தரப்பிரதேச காவல்துறையினர் தன்னை சித்ரவதை செய்ததாக மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறை அதி காரிகள் விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.