துணை வேந்தர்கள் நியமனம்: உயர் நீதிமன்றம் விதித்த தடை ரத்து
4 Feb 2026, 2:09 pm

துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி சட்டப்பேரவையில் அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்த மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது.

உச்ச நீதிமன்றம் அளித்த ஒப்புதலை தொடர்ந்து தமிழ்நாடு அரசிதழில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வெங்கடாசலபதி என்பவர் துணைவேந்தர் நியமனம் புதிய சட்டம், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி அடங்கிய அமர்வு தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு தடை விதித்தது.

இந்த தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்தது.