தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லியில் மெட்ரோ - ரயில் போக்குவரத்திற்கு ஒன்றிய அரசு தடை விதிக்கக் கூடாது! சிபிஎம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

9 Oct 2026, 10:50 pm
தில்லியில் மெட்ரோ - ரயில் போக்குவரத்திற்கு ஒன்றிய அரசு தடை விதிக்கக் கூடாது! சிபிஎம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

தில்லியில் மெட்ரோ - ரயில் போக்குவரத்திற்கு ஒன்றிய அரசு தடை விதிக்கக் கூடாது! சிபிஎம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

புதுதில்லி, அக். 9 –மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்தைக் காரணம் காட்டி, தில்லியில் மெட்ரோ மற்றும் ரயில் போக்குவரத்தை முழுமையாக முடக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகவலியுறுத்தி அக். 10 (இன்று) தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, போராட்டக் காரர்கள் வருவதைத் தடுக்கும் நோக்கில் மெட்ரோ, ரயில்உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துசேவைகளைத் தில்லி மற்றும் ஒன்றிய பாஜக அரசுகள் முடக்கின.கடந்த ஆகஸ்ட் மாதம் நீட் முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவிவிலகக் கோரிய போராட்டத்தின்போதும் இதே உத்தி கையாளப்பட்டது.இதையடுத்து, ரயில் சேவைகள் ரத்து, மெட்ரோ நிலையங்கள் மூடல், இணையச் சேவை முடக்கம் ஆகியவற்றை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். அவரது சார்பில்மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். மற்ற மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாரா யணன், அபிஷேக் மனு சிங்வி, என்.ஹரிஹரன், விருந்தா குரோவர் ஆகியோர் ஆஜராகினர்.தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை அவசரமாக வழக்கை விசாரித்தது.

போக்குவரத்து வசதியை இல்லாமல் ஆக்கக் கூடாது

போராட்டங்களின்போது சட்டம்–ஒழுங்கைப் பாதுகாக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. ஆனால், அதற்காக அனைத்துப் போக்குவரத்தையும் முடக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையைப்பாதிக்கக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

குர்கான், கிரேட்டர் நொய்டா, கிழக்கு தில்லி, தெற்கு தில்லி ஆகிய பகுதிகளிலிருந்து வேலை மற்றும் வாழ்வாதாரத்துக்காகத் தலைநகருக்கு வரும் ஆயிரக்கணக் கான மக்களின் நலனே நீதிமன்றத்தின் கவலை என்று குறிப்பிட்டநீதிபதிகள், மாணவர்கள், ஊழியர்கள், முதியவர்கள் எனப் பலரும் பொதுப் போக்குவரத்தையே நம்பியிருப்பதையும், அனைவரிடமும் சொந்தக் கார் அல்லது தனிப்பட்ட போக்குவரத்து வசதி இல்லை என்பதையும்சுட்டிக்காட்டினர்.

மக்களுக்குச் சிரமமின்றி மெட்ரோ மற்றும் ரயில்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், பயணிகளுக்கு முன்கூட்டியேநாளிதழ்கள் மற்றும் இணையதளங் கள் வழியாக அறிவிப்புகளை வெளியிடவும் ஒன்றிய அரசுக்குஅறிவுறுத்தினர். இதுதொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்ப தாகச் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாதெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.