டிஜிட்டல் தரவு பாதுகாப்புச் சட்டம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
27 Oct 2026, 10:23 pm

டிஜிட்டல் தரவு பாதுகாப்புச் சட்டம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லிடிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023 மற்றும் அதன் விதிகளின் (2025) குறிப்பிட்ட பிரிவுகள் பத்திரிகை சுதந்திரம்,தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பாதிப்பதாகக் கூறி, டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்குஉச்சநீதிமன்றத் தலைமைத் நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாதவி திவான்,”டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்

உள்ள குறிப்பிட்ட பிரிவுகளுக்கு (விதிகள்) இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். ஒருவரைப் பற்றி செய்தி வெளியிடும் முன் அவரிடமே அனுமதி கேட்க வேண்டும் என்றால், செய்தி நிறுவனங்களால் எப்படிச் செயல்பட முடியும்? இது செய்தி அறைகளையே மூட வைத்துவிடும்” என வாதிட்டார்.

வாதத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு,”எதிர்த்தரப்பின் (அரசின்) வாதத்தைக் கேட்காமல் ஒருபோதும் ஒருதலைப்பட்சமாக இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்க மாட்டோம். எனினும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க ஒன்றிய அரசுக்கு இந்த நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறது.

குறிப்பாக, செய்தி நிறுவனங்களே இத்துறையின் வல்லுநர்கள் என்பதால், குடிமக்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் சட்டத்தில் ஏதேனும் தவறான பயன்பாடுகள் இருந்தால் அதை அடையாளம் காண ஒன்றிய அரசுக்கு அவர்களே உதவ முடியும்” எனக் கருத்து தெரிவித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

நாடாளுமன்றம்டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023 (Digital Personal Data Protection Act - DPDP Act) 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இந்த மசோதாவின் திருத்த விதிகளை 2025ஆம் ஆண்டு மோடி அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து சட்டமாக்கியது. இந்தத் திருத்த விதிகள் தொடர்பாகவே ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.