ஆம் ஆத்மியின் சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கம் ஒன்றிய, குஜராத் பாஜக அரசாங்கங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
8 May 2026, 9:37 pm
<p><strong>ஆம் ஆத்மியின் சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கம் ஒன்றிய, குஜராத் பாஜக அரசாங்கங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்</strong></p><p>புதுதில்லி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்த லுக்கு முன்பு, எந்தவித முன்னறிவிப்போ, முடக்கு வதற்கான உத்தரவோ இன்றி, ஆம் ஆத்மி கட்சி யின் மாநில பிரிவின் சமூக ஊடகக் கணக்குகள் முடக் கப்பட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து இதனை எதிர்த்து ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆம் ஆத்மி தாக்கல் செய்த மனுவில், “குஜராத் ஆம் ஆத்மி பிரிவின் முகநூல் பக்கம், இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நேர நெருக்கடி ஆகும். முடக்குவதற்கு முன் முன்னறிவிப்பு, உத்தரவை பிறப்பிக்கவில்லை. தேசிய அளவில் அங்கீகரிக்கப் பட்ட ஒரு அரசியல் கட்சி யின் சமூக ஊடகக் கணக்கு களை முழுமையாக முடக்கு வது, அரசியல் பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாய கப் பங்களிப்பைத் தடுக்கும் செயல். இது எதிர்க்கட்சிக ளின் குரலை ஒடுக்கும் முயற்சி. பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயகத்திற்கு எதிரானது” என அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே,”இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு, குஜராத் மாநில அரசு மற்றும் மெட்டா (முகநூல் தாய் நிறுவனம்) நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் இந்த மனுவை ஏற்கெனவே நிலுவையில் உள்ள ‘மென்பொருள் சுதந்திர சட்ட மையம் எதிர் இந்திய யூனியன்’ என்ற வழக்கோடு இணைக்க வேண்டும்” என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. </p>
